மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 12 ஜூலை 2020

ஸ்பானிஷ் ரீமேக்கில் அனுஷ்கா

ஸ்பானிஷ் ரீமேக்கில் அனுஷ்கா

அனுஷ்கா நடிக்கவுள்ள அடுத்த படம் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகமதி படத்திற்குப் பின் அனுஷ்கா சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் ஒப்பந்தமானார். அந்தப் படத்தை தவிர வேறெந்தப் படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்தார்.

தற்போது அனுஷ்கா மாதவனுடன் இணைந்து சைலன்ஸ் படத்தில் நடித்துவருகிறார். தெலுங்கில் இந்தப் படம் நிசப்தம் என்ற பெயரில் தயாராகிறது. ஹேமந்த் மதுகர் இயக்கும் இந்தப் படத்தை பியூப்பிள் பிலிம் ஃபேக்டரி தயாரிக்கிறது. அமெரிக்காவில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் ஸ்பானிஷ் மொழி திரைப்படம் ஒன்றின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். ஜூலியாஸ் ஐஸ் (Julia's eyes) என்ற அப்படம் 2010ஆம் ஆண்டு வெளியானது.

இந்தப் படத்தை கபீர் லால் தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் ரீமேக் செய்யவுள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.


மேலும் படிக்க


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனுக்குப் புதிய பொறுப்பு!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


தனுஷின் ரீமேக் முடிவை மாற்றிய படம்!


வியாழன், 6 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon