மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 28 மா 2020

நிருபர்கள் மீது கிருஷ்ணசாமி போலீசில் புகார்!

நிருபர்கள் மீது  கிருஷ்ணசாமி போலீசில்  புகார்!

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடந்த மே 28ஆம் தேதி சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். மக்களவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பிறகு புதிய தமிழகம் தலைமை அலுவலகமான நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது‌, தான் தோல்வி அடைந்திருந்தாலும் தென்காசி தொகுதியில் அனைத்து சமூக மக்கள் வாழும் பகுதிகளுக்கும் சென்று பரப்புரை செய்ய முடிந்தது என்றும் அதுவே சமூக இணக்கத்திற்கான அறிகுறி என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து நிருபர்கள் கேள்விகள் கேட்க ஒரு கட்டத்தில் கடும் கோபமடைந்த கிருஷ்ணசாமி, தனது தோல்விக்கு என்ன காரணம் என்று கேட்ட நிருபரை நோக்கி, ' நீ என்ன சாதி?' என்று திருப்பிக் கேட்டார். இது அரசியல் அரங்கிலும் ஊடக வட்டாரத்திலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

கிருஷ்ணசாமியின் இந்த செயலுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் தனது கடும் கண்டனத்தை பதிவு செய்தது. அதிமுக உட்பட கட்சிகளின் தலைவர்கள் இதை தவறு என சுட்டிக்காட்டினர்.

இந்த நிலையில் ஜூன் 4-ஆம் தேதி புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில், குறிப்பிட்ட அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நிருபர்கள் தன்னை தாக்க வந்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

அன்று, 'நீ என்ன சாதி?' என்று கிருஷ்ணசாமியால் கேட்கப்பட்ட நியூஸ் 18 நிருபர் கோகுல் மற்றும் புதிய தலைமுறை, ரெட் பிக்ஸ், ஜெயா தொலைக்காட்சி நிருபர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

புகாருக்கு ஆளான நிருபர்களிடம் பேசியபோது, ' அந்த செய்தியாளர் சந்திப்பு சுமார் 30 நிமிடம் நடந்தது. நேரலை ஒளிபரப்பும் செய்யப்பட்டது. உண்மையில் யாரை யார் தாக்க வந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். புகாரை சட்டப்படி எதிர் கொள்வோம்" என்று தெரிவித்தனர்.

என்ன சாதி என்று கேட்ட கிருஷ்ணசாமிக்கு கண்டனம் தெரிவித்த பத்திரிக்கையாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள், நிருபர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது தொடர்பாக இதுவரை கண்டனக் குரல் எழுப்பவில்லை.


மேலும் படிக்க


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனுக்குப் புதிய பொறுப்பு!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


தனுஷின் ரீமேக் முடிவை மாற்றிய படம்!


வியாழன், 6 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon