மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 12 ஜூலை 2020

தூய்மைவாதத்தை விமர்சிக்கும் லெய்லா

தூய்மைவாதத்தை விமர்சிக்கும் லெய்லா

சர்வாதிகார அரசின் தூய்மைவாதக் கொள்கையால் தன் மகளை பறிகொடுத்த தாயின் போராட்டமாக உருவாகியுள்ளது ‘லெய்லா’ என்ற வெப் சீரிஸ்.

எதிர் காலத்தில் தொடங்கும் கதையில், கலப்பினத்தில் பிறக்கும் குழந்தைகளை அரசு பறித்துக்கொள்கிறது. சர்வாதிகார அரசு ஆட்சி செய்பவரை கடவுள் போல மாற்ற, ஆர்ய வர்தா என்ற சர்வாதிகாரியின் முகமே அனைத்து இடங்களிலும் நிறைந்திருக்கிறது. மக்கள் தங்கள் சாதி, மதம், வருமானம் என்ற அடிப்படையில் ஒவ்வொரு பகுதியாக அடைக்கப்பட்ட நிலையில் வசிக்கிறார்கள்.

இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்த ஷாலினியின் மகளை அரசின் தூய்மைவாதக் கொள்கையால் தாயிடமிருந்து பறிக்கப்படுகிறது. கணவர் கொல்லப்பட மகளைத் தேடும் தாயின் போராட்டமாக பயணிக்கிறது லெய்லா.

ஹூமா குரேஷி, சித்தார்த், சீமா பிஸ்வாஸ் நடித்துள்ளனர். தீபா மேத்தா,ஷங்கர் ராமன், பவன் குமார் ஆகியோர் இயக்கியுள்ளனர். பிரயாக் அக்பர் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு லெய்லா உருவாகியுள்ளது.

டிஸ்டோபியன் ஃபிக்‌ஷன் ஜானரில் உருவாகியிருக்கிறது இப்படம். ஒரு கற்பனையான சமூகத்தை உருவாக்கி அதன் மூலம் சமகால அரசியலையும் அடிப்படைவாதக் கொள்கையையும் விமர்சிக்கிறது லெய்லா.

நெட்பிளிக்ஸ் பிளாட்ஃபார்மில் ஜுன் 14 ஆம் தேதி ஆறு எபிஸொட்கள் கொண்ட வெப் சீரியஸாக வெளியாகிறது லெய்லா.

லெய்லா ட்ரெய்லர்


மேலும் படிக்க


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனுக்குப் புதிய பொறுப்பு!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


தனுஷின் ரீமேக் முடிவை மாற்றிய படம்!


வியாழன், 6 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon