மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

வீடுகள் விற்பனை உயர்வு!

வீடுகள் விற்பனை உயர்வு!

ஜனவரி - மார்ச் காலாண்டில் இந்தியாவில் வீடு விற்பனை 13 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

சொத்து ஆலோசனை நிறுவனமான சி.பி.ஆர்.இ. வீடு விற்பனை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டின் ஜனவரி - மார்ச் காலாண்டில் மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், புனே ஆகிய முக்கியமான ஏழு நகரங்களில் மொத்தம் 33,000 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சென்ற ஆண்டை விட 13 சதவிகிதம் கூடுதலான அளவில் வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2018 ஜனவரி - மார்ச் காலாண்டில் மொத்தம் 29,000 வீடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

புதிதாகத் தொடங்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையும் 25,700லிருந்து 30,000 ஆக உயர்ந்துள்ளது. மும்பை, சென்னை, பெங்களூரு மற்றும் டெல்லி ஆகிய நான்கு நகரங்களில் வீடு விற்பனையும் புதிதாகத் தொடங்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையும் 70 முதல் 75 சதவிகிதம் வரையில் வளர்ச்சி கண்டுள்ளது. மலிவு விலை வீடுகளுக்கான திட்டம் மற்றும் ஜிஎஸ்டி வரி குறைப்பு, ரியல் எஸ்டேட் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களால்தான் வீடு விற்பனை உயர்ந்துள்ளதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும், விற்பனையாகாமல் இருக்கும் வீடுகளின் எண்ணிக்கையும் ஜனவரி - மார்ச் காலாண்டில் கணிசமான அளவில் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனுக்குப் புதிய பொறுப்பு!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


தனுஷின் ரீமேக் முடிவை மாற்றிய படம்!


வியாழன், 6 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon