மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 11 ஜூலை 2020

வெற்றியுடன் கணக்கைத் தொடங்கிய இந்தியா!

வெற்றியுடன் கணக்கைத் தொடங்கிய இந்தியா!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தான் எதிர்கொண்ட முதல் போட்டியிலேயே வெற்றிவாகை சூடியுள்ளது இந்தியா.

சௌதாம்டனில் நேற்று (ஜூன் 5) நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவும் தென் ஆப்பிரிக்க அணியும் பலபரீட்சை நடத்தின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆனால், இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சு, ஆடுகளத்தின் தன்மை காரணமாக அவர்களது பேட்டிங் விசேஷமாக அமையவில்லை.

50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 228 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

தென் ஆப்பிரிக்க அணியைப் போல இந்தியாவிலும் தொடக்க வீரர் தவன், விராட் கோலி ஆகியோரது விக்கெட்டுகள் உடனடியாக வீழ்ந்தன. அதன்பின் ரோஹித் ஷர்மாவுடன் கே.எல்.ராகுல் ஜோடி சேர்ந்தார். நிதானமான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்த ரோஹித் ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

42 பந்துகளை எதிர்கொண்ட ராகுல் 26 ரன்கள் சேர்த்து ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் ரோஹித்துடன் தோனி இணைந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடியதால் வெற்றிக்கு அருகில் இந்திய அணி சென்றது. நீண்ட நாட்களாக பார்ம் இன்றி தவித்துவந்த ரோஹித் ஷர்மா 23ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார்.

34 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் தோனி கிறிஸ் மோரிஸ் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இறுதி நேரத்தில் ஹர்திக் பாண்ட்யா 3 பவுண்டரிகளை விரட்ட இந்திய அணி 47.3 ஓவரில் 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ரோஹித் 122 ரன்களுடனும், ஹார்திக் பாண்ட்யா 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஜூன் 9ஆம் தேதி நடைபெறவுள்ள அடுத்த ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ள உள்ளது.


மேலும் படிக்க


விஜய்க்கு இது முதன்முறை!


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


டிஜிட்டல் திண்ணை: அமைச்சர் பிச்சையெடுக்கும் அதிமுக - தாக்கும் பாஜக!


செந்தில் பாலாஜி மாடல்: திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் விவாதம்!


வியாழன், 6 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon