மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 6 ஜுன் 2019

திமுகவினரின் பள்ளிகளில் இந்தி: ஹெச்.ராஜா வெளியிட்ட பட்டியல்!

திமுகவினரின் பள்ளிகளில் இந்தி: ஹெச்.ராஜா வெளியிட்ட பட்டியல்!

புதிய தேசிய கொள்கையில் மும்மொழிக் கொள்கை கட்டாயமாக்கப்படுவதாகவும், இந்தி பேசாத மாநிலங்களிலுள்ள மாணவர்கள் தாய்மொழியுடன் ஆங்கிலம் மற்றும் இந்தியைப் படிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் இந்தி திணிக்கப்படுவதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, மும்மொழித் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தின. இதனால் புதிய தேசியக் கல்விக் கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இந்தியை எதிர்க்கும் திமுக தலைவர்களின் கல்வி நிறுவனங்களிலேயே இந்தி பயிற்றுவிக்கப்படுவதாக பாஜகவினர் குற்றம்சாட்டினர். ஆனால், அதோடு நின்றுவிடாத பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, இந்தி பயிற்றுவிக்கும் திமுகவினரின் கல்வி நிறுவனங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.

ஹெச்.ராஜா முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்தப் பட்டியலில், திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன் சென்னை புரசைவாக்கத்தில் நடத்தும் சன் ஷைன் சீனியர் செகண்டரி (சிபிஎஸ்இ) பள்ளியில் இந்தி பயிற்றுவிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேபோல திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் பேரன் வெற்றிஅழகன் சென்னை நொளம்பூரில் நடத்தும் டவுன் பள்ளியிலும் (சிபிஎஸ்இ), முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி சகோதரர் தேவராஜ் நடத்தும் சென்னை பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியிலும், திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் ஸ்ரீ பாரத் வித்யாஷ்ரம் பள்ளியிலும் இந்தி பயிற்றுவிக்கப்படுவதாக அந்தப் பட்டியலில் தெரிவித்துள்ளார்.

இதுபோலவே திட்டக்குடி எம்.எல்.ஏ கணேசனின் வெங்கடேஸ்வரா (சிபிஎஸ்இ) பள்ளியிலும், ராணிப்பேட்டை எம்.எல்.ஏ காந்தியின் மகன் கீகாய் வோர்ல்ட் பள்ளியிலும், துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தின் கிங்க்ஸ்டன் இன்டர்நேஷனல் அகாடமியிலும், திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மகன் ஜீவா வேலுவால் நடத்தப்படும் ஜீவா வேலு இன்டர்நேஷனல் பள்ளியிலும் இந்தி பயிற்றுவிக்கப்படுகிறது என்றுள்ளார். மேலும், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, ஐஜேகே நிர்வாகிகள் நடத்தும் பள்ளிகள் என 45 பள்ளிகளின் பட்டியலை ஹெச்.ராஜா வெளியிட்டுள்ளார்.

மேலும் தனது முகநூல் பதிவில், “அரசுப் பள்ளிகளில் இந்தி கற்றுக்கொள்ள வசதி ஏற்பட்டால் இவர்கள் பிழைப்பில் மண் விழுந்திரும். இப்போ புரியுதா இவர்கள் எதிர்ப்பு ஏன் என்று” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


மேலும் படிக்க


விஜய்க்கு இது முதன்முறை!


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


டிஜிட்டல் திண்ணை: அமைச்சர் பிச்சையெடுக்கும் அதிமுக - தாக்கும் பாஜக!


செந்தில் பாலாஜி மாடல்: திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் விவாதம்!

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

வியாழன் 6 ஜுன் 2019