மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

மீண்டும் காதலில் விழுந்த விஷ்ணு?

மீண்டும் காதலில் விழுந்த விஷ்ணு?

பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் எடுத்த செல்ஃபி குறித்து விஷ்ணு விஷால் விளக்கமளித்துள்ளார்.

நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பரான நடராஜின் மகளான ரஜினியை கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் செய்த விஷ்ணு விஷால், கடந்த வருடம் மனைவியை விவாகரத்து செய்தார்.

பிறகு தன்னுடன் 'ராட்சசன்' படத்தில் ஜோடியாக நடித்த அமலாபாலும் அவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் வதந்தி பரவியது. ஆனால் இதனை விஷ்ணு விஷால் மறுத்தார்.

இந்நிலையில் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் இருக்கும் ‘செல்பி’ படங்களை விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் இருவரும் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல் பரவியது.

இந்நிலையில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் விஷ்ணு, “ நீண்ட நாள்களாக எங்களுக்கு பழக்கம் உள்ளது. இருவருக்கும் பொதுவான நண்பர்கள் பலர் உள்ளனர். எனவே நண்பர்களுடன் சேர்ந்து நேரத்தை செலவிடுவோம். இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கும். இதற்கு மேல் இப்போது எதுவும் கூறமுடியாது. இருவருக்கும் நிறைய பொறுப்புகள் உள்ளன” என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க


விஜய்க்கு இது முதன்முறை!


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


டிஜிட்டல் திண்ணை: அமைச்சர் பிச்சையெடுக்கும் அதிமுக - தாக்கும் பாஜக!


செந்தில் பாலாஜி மாடல்: திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் விவாதம்!


வியாழன், 6 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon