தமிழகச் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், மத்திய அரசின் திட்டங்களை, தமிழகத்தில் விரைந்து செயல்படுத்தும் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசின் அனுமதி பெற்ற நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. தேனியில் நியூட்ரினோ அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கூடங்குளம் அணு உலையில் அணுக்கழிவு மையம் அமைக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தவிர, தமிழகத்தில் புதிய சாலைகளை அமைக்கும் வகையில் பாரத்மாலா பரியோஜனா திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
எட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் நீதிமன்ற உத்தரவால் தடையைச் சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் மத்திய அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்களைத் தமிழகத்தில் செயல்படுத்தும் சிறப்பு அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மக்களின் எதிர்ப்பு, நீதிமன்ற உத்தரவுகள் போன்றவற்றினால் ஏற்படும் சிக்கல்களைக் களைந்து, அத்திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகப் போக்குவரத்துத் துறையில் பணியாற்றி வரும் ராதாகிருஷ்ணன், தற்போது தமிழகச் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க
ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!
ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!
டிஜிட்டல் திண்ணை: அமைச்சர் பிச்சையெடுக்கும் அதிமுக - தாக்கும் பாஜக!
செந்தில் பாலாஜி மாடல்: திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் விவாதம்!