இனி ரீமேக் படங்களில் நடிப்பதில்லை என முடிவெடுத்திருந்த தனுஷை ஒரு பாலிவுட் படம் அந்த முடிவை மாற்ற வைத்துள்ளது.
ஆயுஷ்மன் குரானா, தபு நடித்த இந்திப் படமான அந்தாதுன் திரைப்படம் சென்ற ஆண்டு வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இந்தப் படம் 32 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி 450 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை நிகழ்த்தியுள்ளது.
இந்தப் படத்தைப் பார்த்த தனுஷ், படத்தின் புதுமையான திரைக்கதையினால் ஈர்க்கப்பட்டுள்ளார். படத்தின் திரைமொழியும் நடிகர்களின் கதாபாத்திரமும் தனுஷை கவர்ந்துள்ளன. 2009ஆம் ஆண்டிலிருந்து ரீமேக் படங்களில் இனி நடிப்பதில்லை என முடிவெடுத்திருந்த தனுஷ் இந்தப் படத்தின் மேஜிக்கால் தன் முடிவை மாற்றியுள்ளார். மேலும், இதன் ரீமேக் உரிமங்களைப் பெற தீவிரமாக முயற்சி செய்தும் வருகிறார்.
அதே சமயம், தனுஷ் தன்னை பாலிவுட்டில் அறிமுகப்படுத்திய ஆனந்த் எல்.ராயின் அடுத்த இந்தி படத்தில் நடிக்கவுள்ளார். ஜூன் 21ஆம் தேதி தனுஷ் நடித்த பிரெஞ்சு - ஆங்கிலத் திரைப்படமான தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப் பகிர் படத்தின் தமிழ் டப்பிங்கான பக்கிரி திரைப்படம் வெளியாகவுள்ளது.
மேலும் படிக்க
ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!
ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!
டிஜிட்டல் திண்ணை: அமைச்சர் பிச்சையெடுக்கும் அதிமுக - தாக்கும் பாஜக!
செந்தில் பாலாஜி மாடல்: திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் விவாதம்!