மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 6 ஜுன் 2019

மதுரை ஆட்சியர் திடீர் இட மாற்றம்: காரணம் என்ன?

மதுரை ஆட்சியர் திடீர் இட மாற்றம்: காரணம் என்ன?

மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த நாகராஜன் இட மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரிகள் நுழைந்தது தொடர்பான விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அந்த இடத்துக்கு சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் கூடுதல் செயலாளராகப் பணியாற்றிவந்த எஸ்.நாகராஜன் நியமனம் செய்யப்பட்டார். அவர் ஏப்ரல் 28ஆம் தேதி மதுரை ஆட்சியராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

நாகராஜன் பொறுப்பேற்று ஒரு மாதம் மட்டுமே ஆகியுள்ள நிலையில், திடீரென நேற்று இட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அறிவிப்பில், “மதுரை மாவட்ட கலெக்டர் எஸ்.நாகராஜன், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புதிய முயற்சிகள் நிறுவன இயக்குநராக நியமிக்கப்படுகிறார். மதுரை மாவட்ட கலெக்டராகக் கூடுதல் பொறுப்பு வகிக்கும்படி அந்த மாவட்ட வருவாய் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

ஆளுங்கட்சியினரால் சிபாரிசு செய்யப்பட்டவர்களுக்கு அங்கன்வாடி பணி வழங்காமல், தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுத்து 1,500 பேருக்குப் பணி ஆணை வழங்கியதன் காரணமாக அவர் இட மாற்றம் செய்யப்பட்டதாக மதுரை வட்டாரங்களில் செய்தி வெளியாகியது.

இதுதொடர்பாக மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது முகநூல் பக்கத்தில், “1,500 குடும்பங்களில் ஒளியேற்றி இருக்கிறீர்கள் . நல்லதை செய்ததற்காக தீயவர்களால் தண்டிக்கப்படுவது சிறந்த வெகுமதியே. சென்று வாருங்கள் திரு.நாகராஜன் இ.ஆ.ப அவர்களே! மதுரை உங்களைப் போற்றும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் மதுரையில் நேற்று (ஜூன் 5) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜுவிடம், மதுரை ஆட்சியர் மாற்றப்பட்டதில் அரசியல் குறுக்கீடு உள்ளதா, ஏனெனில் அங்கன்வாடி பணியாளர்களை நியமித்தவுடன் மாற்றப்பட்டுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு செல்லூர் ராஜு, “அது தவறான தகவல். அவர் தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர். அவருடைய அனுபவமும் திறமையும் தற்போது மாற்றப்பட்டிருக்கும் துறைக்குத் தேவை என்பதால் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சத்துணவு ஊழியர்கள் பணி நியமன விவகாரம் காரணமாகவே ஆட்சியர் மாற்றப்பட்டதாகக் கூறுவது சரியல்ல” என்று தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் ஊழியர்கள் முதல் ஆட்சியர்கள் வரை அனைவரும் சுதந்தரமாகச் செயல்படுகிறார்கள் என்றவர், “திமுக ஆட்சிக்காலத்தில்தான் அரசுக்கு ஆதரவாகச் செயல்படவில்லையெனில் அதிகாரிகள் இட மாற்றம் செய்யப்படுவர்” என்று குற்றம்சாட்டினார்.


மேலும் படிக்க


விஜய்க்கு இது முதன்முறை!


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


டிஜிட்டல் திண்ணை: அமைச்சர் பிச்சையெடுக்கும் அதிமுக - தாக்கும் பாஜக!


செந்தில் பாலாஜி மாடல்: திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் விவாதம்!

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வியாழன் 6 ஜுன் 2019