மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 9 ஜூலை 2020

கிச்சன் கீர்த்தனா: கொத்து தோசை

கிச்சன் கீர்த்தனா: கொத்து தோசை

ஸ்கூல் ரெசிப்பிகள்: ஒன்ஸ் மோர் கேட்கவைக்கும் தோசை!

வழக்கமாகச் செய்யும் உணவுகளைச் சற்று மாற்றி யோசித்துச் செய்தால் வித்தியாசமான சுவையில் இருப்பதுடன் நம் குழந்தைகளுக்கு மதிய உணவாகவும் கொடுத்தனுப்பலாம். தோசையைச் சாப்பிட மறுக்கும் குழந்தைகள் இந்தக் கொத்து தோசையை ஒன்ஸ் மோர் கேட்பார்கள்.

என்ன தேவை?

தோசை மாவு - 2 கரண்டி

முட்டை – ஒன்று

வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு

மிளகு - அரை டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

வெண்ணெய் அல்லது நெய் - 2 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

மிளகு, சீரகத்தைப் பொடித்து வைக்கவும். முட்டையை உடைத்து, சிறிதளவு உப்பு சேர்த்து அடித்து வைக்கவும். தோசைக்கல்லில் 2 கரண்டி தோசை மாவை ஊற்றித் தேய்க்கவும் (சற்று தடிமனாக இருந்தால் நல்லது; மெல்லியதாக வார்க்க வேண்டாம்). முட்டையை உடைத்து, சிறிது உப்பு சேர்த்து அடித்து, தோசை மீது (வேகாத தோசை) ஊற்றவும்.

பின்னர் திருப்பிப் போட்டு மிதமான தீயில் வேகவைக்கவும். வெந்த முட்டை தோசையை எடுத்துச் சிறு துண்டுகளாக வெட்டவும். கடாயில் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துச் சூடாக்கி, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பாதி வதங்கியதும் தோசைத் துண்டுகளைச் சேர்த்து, சிறிதளவு உப்பு போட்டு வதக்கவும். பின்னர் மிளகு - சீரகப் பொடி சேர்த்து வதக்கி, நறுக்கிய கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

என்ன பலன்?

ஒரு முட்டையில் நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது. மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. இது எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும். இதிலிருக்கும் லூடின் (Lutein), சியாங்தின் ஆகியவை கண் நோய்கள் வராமல், கண் புரை ஏற்படாமல் தடுக்கும்.

நேற்றைய ரெசிப்பி: தோசை - குடமிளகாய் மசாலா


மேலும் படிக்க


விஜய்க்கு இது முதன்முறை!


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


டிஜிட்டல் திண்ணை: அமைச்சர் பிச்சையெடுக்கும் அதிமுக - தாக்கும் பாஜக!


செந்தில் பாலாஜி மாடல்: திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் விவாதம்!


வியாழன், 6 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது