மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 5 ஜுன் 2019

மகனை அமைச்சராக்க பன்னீரின் ஹரித்துவார் வியூகம்!

மகனை அமைச்சராக்க பன்னீரின் ஹரித்துவார் வியூகம்!

மத்திய அமைச்சரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் இடம்பிடிப்பாரா என்று பல யூகங்கள் வெளிவந்த நிலையில் மே 30ஆம் தேதி நடைபெற்ற மோடியின் அமைச்சரவை பதவிப் பிரமாணத்தில் தமிழகத்தில் யாருக்கும் இடமில்லாமல் போனது.

தனக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாமல் ஓ.பன்னீரின் மகனுக்கு மட்டும் மத்திய அமைச்சர் பதவி வழங்கக் கூடாது என்று கடுமையாகப் போராடிய வைத்திலிங்கம் முக்கிய முடிவெடுக்கப் போவதாகத் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருகிறார். இதையும் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் பதிவு செய்தோம்.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம், எப்படியாவது தன் மகனை மத்திய அமைச்சரவையில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற தனது போராட்டத்தை ரகசியமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

இதுபற்றி பன்னீருக்கு நெருக்கமான அதிமுக நிர்வாகிகள் நம்மிடம் பேசினார்கள்.

“பன்னீரின் ஸ்டைல் என்பது வெளிப்படையாகப் போராட்டம் நடத்துவது கிடையாது. எங்கே யாரைப் பார்த்துக் காய் நகர்த்தினால் விஷயம் நடக்குமோ அந்த திசையில் எந்தத் தயக்கமும் இன்றி செல்வார். இந்த வகையில் சில நாட்களுக்கு முன் ஹரித்துவாரில் இருந்து முக்கியமான ஒரு சாமியார் சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் தென்பெண்ணை இல்லத்துக்கு வந்திருக்கிறார்.

ஹரித்துவார், ரிஷிகேஷ் போன்ற பகுதிகளில் ஓ. பன்னீர் யாகம் நடத்தியபோது அங்கே அவருக்குச் சகல உதவிகளையும் செய்தது இந்த சாமியார்தான். அப்போதிலிருந்தே அவருடன் நெருக்கம் பாராட்டிய பன்னீர், அந்த சாமியாருக்கு பாஜக தலைவர் அமித் ஷாவுடன் நல்ல பழக்கம் என்பதை அறிந்து மேலும் நெருக்கமான பழகினார். ஓ.பன்னீர்செல்வத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, அந்த சாமியார் அண்மையில் சென்னையிலிருக்கும் தென்பெண்ணை இல்லத்துக்கு வந்திருக்கிறார். எப்படியாவது தன் மகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வேண்டும் என்றும், அதற்காக அமித் ஷாவிடம் பேச வேண்டும் என்றும் சாமியாரிடம் பன்னீர்செல்வம் வேண்டுகோள் வைத்திருக்கிறார். ஹரித்துவார் சாமியாரும் இதற்கு உத்தரவாதம் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். எப்போதுமே ஆன்மிகத்தில் அதிக நம்பிக்கையுள்ள ஓ.பன்னீர், அந்த சாமியாரின் வாக்குக்குப் பிறகு மேலும் நம்பிக்கையோடு இருக்கிறார். அது அவரது நடவடிக்கைகளிலேயே தெரிகிறது” என்றவர்கள் தொடர்ந்தனர்.

“ஓ.பன்னீர்செல்வத்தை அவரது தென்பெண்ணை இல்லத்தில் சந்திக்கச் சென்றால் கீழே இருக்கும் விசிட்டர்ஸ் அறையில் வைத்துதான் சந்திப்பார். முக்கியமான ரகசிய சந்திப்புகள் மட்டும் மேலே இருக்கும் ரூமில் நடக்கும். பன்னீர்செல்வம் மேல் அறையில் இருக்கிறார் என்றாலே அவரை யாராலும் அவ்வளவு எளிதாகச் சந்தித்துவிட முடியாது. ஏனெனில் முக்கியமான விஷயமாகப் பேசிக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். இது பன்னீர் அணியின் அனைவருக்குமே நன்கு தெரியும்.

சில தினங்களாக அவரது வீட்டுக்குச் செல்லும் அதிமுக நிர்வாகிகளிடம் கீழே இருக்கும் அறையில் வைத்துப் பேசிவிட்டு, ’மேல் ரூம்ல தம்பி இருக்காப்ல, பாத்துட்டுப் போயிடுங்க’ என்று பன்னீரே சொல்கிறார். தலைவரே சொல்லிவிட்டாரே என்று வேறு வழியில்லாமல் பன்னீரைப் பார்க்கப் போகும் பலரும் மேல் அறைக்குச் சென்று ஓ.பி.ரவீந்திரநாத்தையும் சென்று சந்தித்துவிட்டு வருகிறார்கள். அமைச்சர் ஆகிவிட்டால் எப்படி இருக்க வேண்டும் என்று இப்போதே பயிற்சி கொடுப்பது போல இருக்கிறது” என்கிறார்கள் பன்னீர்செல்வம் ஆதரவு நிர்வாகிகள்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: அமைச்சர்கள்- எம்.எல்.ஏ.க்களின் செல்போன் ரிப்போர்ட்- அதிர்ந்த எடப்பாடி


செந்தில் பாலாஜி மாடல்: திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் விவாதம்!


ஆட்சிக் கவிழ்ப்பு: மத்திய அரசின் உதவியை நாடும் எடப்பாடி


2.0: சீனாவில் பிரம்மாண்ட ஓப்பனிங்!


இளையராஜா 76: சுவாரஸ்யமான தருணங்கள்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

ஓட்டுக்கு பணம்: மக்களிடம் சத்தியம் வாங்க முடியாது!

2 நிமிட வாசிப்பு

ஓட்டுக்கு பணம்: மக்களிடம் சத்தியம் வாங்க முடியாது!

ரிலாக்ஸ் டைம்: கேழ்வரகு இனிப்பு அடை!

2 நிமிட வாசிப்பு

ரிலாக்ஸ் டைம்: கேழ்வரகு இனிப்பு அடை!

புதன் 5 ஜுன் 2019