மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 7 ஆக 2020

வாக்குச் சீட்டு முறையைக் கொண்டுவர போராட்டம்: அமமுக

வாக்குச் சீட்டு முறையைக் கொண்டுவர போராட்டம்: அமமுக

வாக்குச் சீட்டு முறையைக் கொண்டுவர போராட்டம் நடத்துவோம் என்று முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

காயிதே மில்லத்தின் 124 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மலர்ப்போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினர். அமமுக சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், ‘அமமுகவின் நிலை குறித்து ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளாரே’ என்று கேட்கப்பட்டது.

அதற்கு, “ஜெயக்குமார் எத்தனை சீட் ஜெயித்தார், அவர் மகனையே வெற்றிபெற வைக்க முடியவில்லை. வாக்குப் பதிவு இயந்திரத்திற்கும் சேர்த்து வேலைப் பார்த்தால் எந்த அரசியல் கட்சியாலும் ஜெயிக்கமுடியாது. இந்தியா முழுவதும் அது நடந்திருக்கிறது. மத்திய அரசை பலமாக எதிர்ப்பதால் எங்களை குறிவைத்து காலி செய்தனர். இதைபோல் மத்திய அரசை எதிர்த்த எல்லா தலைவர்களையும் காலியாக்கிவிட்டனர்” என்றார்.

ஜெயக்குமார் போன்றவர்கள் இதுபோன்று பேசி பேசி தான் அரசியல் செய்ய முடியும். தினகரன், சசிகலாவை நம்பியிருக்கும் எங்கள் கூட்டம் எந்த நேரத்திலும் சோடைப் போகாது என்ற வெற்றிவேல், “வருகின்ற காலத்தில் வாக்குப் பதிவு எந்திரத்தில் வாக்குப் பதிவு நடைபெறுவதைத் தடுத்து, உலகம் முழுவதும் நடைபெறுவது போல ஓட்டு சீட்டு முறையில் தேர்தல் நடத்துவதற்காக மிக பெரிய போராட்டம் நடத்துவோம். அதில் வெற்றியும் பெறுவோம்” என்று தெரிவித்தார்.

மேலும், ““ஸ்லீப்பர் செல் என்று எம்.எல்.ஏக்களை சொன்னேன். எம்.எல்.ஏக்கள் இருக்காங்க தேவைப்படும்போது பயன்படுத்துவோம். பயன்படுத்துவதற்கான நேரம் இது இல்லை” என்றார் வெற்றிவேல்.


மேலும் படிக்க


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


டிஜிட்டல் திண்ணை: அமைச்சர்கள்- எம்.எல்.ஏ.க்களின் செல்போன் ரிப்போர்ட்- அதிர்ந்த எடப்பாடி


மீண்டும் செலவா? குமுறும் திமுக நிர்வாகிகள்!


இளையராஜா பாடல்களுக்கு தடை!


மகனை அமைச்சராக்க பன்னீரின் ஹரித்துவார் வியூகம்!


புதன், 5 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon