மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 7 ஆக 2020

மும்மொழிக் கொள்கையை ஏற்கிறாரா முதல்வர்?

மும்மொழிக் கொள்கையை ஏற்கிறாரா முதல்வர்?

தமிழ் பேசாத மாநிலங்களில் ஆப்ஷனல் (மூன்றாவது) மொழியாக தமிழை வைத்தால் அது பழமையான தமிழ் மொழிக்கு செய்கிற பெருந்தொண்டாக இருக்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 5) ட்விட்டர் பதிவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது மொழிக் கொள்கையில் அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,

மத்திய அரசு புதிதாக பதவியேற்ற பிறகு வெளியிடப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தில், நாடு முழுவதும் கல்வித் திட்டத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது என்றும் மாநில மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக கட்டாய இந்தியை கற்க வேண்டும் என்றும் ஒரு அம்சம் சேர்க்கப்பட்டது. இதை எதிர்த்து தமிழ்நாட்டில் இருந்து கடுமையான கண்டனக் குரல்கள் எழுந்தன.

தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் தமிழ்நாடு இரு மொழிக் கொள்கையின் படி தான் நடக்கும் என்று அறிவித்தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இருமொழிக்கொள்கை படியே அரசு செயல்படும் என்று அறிவித்தார்.திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட அனைத்து அரசியல் தலைவர்களும் பல்வேறு கல்வியாளர்களும் மத்திய அரசின் திட்டத்திலுள்ள இந்த மும்மொழிக் கொள்கையை கடுமையாக எதிர்த்தனர்.

இந்நிலையில் வரைவு கொள்கையில் திருத்தம் கொண்டு வந்த மத்திய அரசு இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயம் அல்ல என்று தெரிவித்தது.

அதாவது மும்மொழிக் கொள்கை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற பரிந்துரையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேசமயம், மூன்றாவது மொழியைத் தேர்வு செய்வது தொடர்பான பிரிவில், இந்தி பேசாத மாநிலங்களில், அந்தந்த மாநில மொழி, ஆங்கிலத்துடன், இந்தியை கற்பிக்க வேண்டும் என்ற பரிந்துரையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தி பேசும் மாநிலங்கள், இந்தி பேசாத மாநிலங்கள் என பிரித்துக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அத்தகைய வகைப்பாடே நீக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் கல்வியாளர்கள் பலர், “மூன்றாவது மொழியை மாணவர்களே விருப்பப்படி தேர்வு செய்துகொள்ளலாம் என பரிந்துரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மூன்றாவது மொழியை மாணவர்களே தேர்வு செய்துகொள்ளலாம் என்பதே மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு மாற்றிக் கொள்ளவில்லை என்பதற்கான அடையாளம்தான்” என்று இந்தத் திருத்தத்தின் பின்னணி பற்றிக் குறிப்பிடுகிறார்கள்

இந்த நிலையில், “தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறமாநிலங்களில் தமிழை தேர்வு மொழியாக வைக்க வேண்டும் என்று பிரதமருக்கு வேண்டுகோள் வைப்பது என்பது மறைமுகமாக மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பது போன்றே படுகிறது. இது ஆபத்தானது. பிற மாநிலங்களில் தமிழை தேர்வு மொழியாக வைத்தால், தமிழ்நாட்டில் இந்தியை தேர்வு மொழியாக வைக்கலாம் என்ற ஓர் உள்கருத்தும் இதில் புலப்படுகிறது. எனவே முதல்வரின் கருத்து மும்மொழிக் கொள்கையை வழிமொழிவது போலவே இருக்கிறது. இதுபற்றி முதல்வர் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கூறுகிறார்கள் கல்வியாளர்கள்.

பிற மாநிலங்களில் தமிழை விருப்பப் பாடமாக சேர்க்க வேண்டும் என்பது, மறைமுகமாக மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பதாகும், என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


டிஜிட்டல் திண்ணை: அமைச்சர்கள்- எம்.எல்.ஏ.க்களின் செல்போன் ரிப்போர்ட்- அதிர்ந்த எடப்பாடி


மீண்டும் செலவா? குமுறும் திமுக நிர்வாகிகள்!


இளையராஜா பாடல்களுக்கு தடை!


மகனை அமைச்சராக்க பன்னீரின் ஹரித்துவார் வியூகம்!


புதன், 5 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon