மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

'ஹை கான்செப்ட்டில்' கண்டதைப் படிக்காதே!

'ஹை கான்செப்ட்டில்' கண்டதைப் படிக்காதே!

கபடம் திரைப்படத்தை தொடர்ந்து ஜோதி முருகன் இயக்கும் இரண்டாவது படத்திற்கு கண்டதைப் படிக்காதே என தலைப்பிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஜோதி முருகன் பிரபல இயக்குநர்களான ராதா மோகன், சிம்பு தேவன், வேலு பிரபாகரன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இவரது முதல் படமான கபடம் அமேசான் டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் வெளியானது. ரொமாண்டிக் த்ரில்லர் ஜானரில் உருவான கபடம் படத்தை தொடர்ந்து இவர் இயக்கும் இரண்டாவது படம் கண்டதைப் படிக்காதே.

ஆதித்யா ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் திருப்பாச்சி படத்தில் பான்பராக் ரவி கதாபாத்திரத்தில் நடித்த ஆர்யான் வில்லனாக நடித்திருக்கிறார். சபிதா ஆனந்த் முக்கியமான கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். மேலும் ப்ரீத்தி, சுஜி, வைஷாலி, ஜென்னி என நான்கு நாயகிகள் நடித்திருக்கின்றனர்.

கண்டதை படிக்காதே படம் பற்றி ஜோதி முருகன் கூறுகையில், “இது ஒரு ஹை கான்செப்ட் ஸ்டோரி லைனை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் திரைக்கதை அமைப்பை கொண்ட படங்களை ஹாலிவுட்டில் ஹை கான்செப்ட் திரைப்படம் என்று அழைப்பார்கள். இந்த மாதிரியான படங்களில் எந்த நடிகர் நடித்தாலும் படத்தின் கதை அம்சமே படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கிவிடும். அதே மாதிரி இந்த படமும் ஹாரர், மர்டர், மிஸ்டரி, மற்றும் ஆக்சன் கலந்த ஜனரஞ்சமான திரைப்படமாக இருக்கும். படம் ஆரம்பித்து மூன்று நிமிடங்களுக்குள் ரசிகர்களின் கவனத்தை படம் கவர்ந்துவிடும். படத்தின் இறுதிக் காட்சி வரையிலும் சஸ்பென்ஸ் இருந்துக்கொண்டேயிருக்கும். ஒவ்வொரு காட்சியிலும் அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பை தூண்டுகின்ற வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

புல்லி மூவிஸ் சார்பில் சத்யாராம் இப்படத்தை தயாரித்திருக்கிறார். மேலும் ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: அமைச்சர்கள்- எம்.எல்.ஏ.க்களின் செல்போன் ரிப்போர்ட்- அதிர்ந்த எடப்பாடி


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


செந்தில் பாலாஜி மாடல்: திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் விவாதம்!


2.0: சீனாவில் பிரம்மாண்ட ஓப்பனிங்!


ஆட்சிக் கவிழ்ப்பு: மத்திய அரசின் உதவியை நாடும் எடப்பாடி


புதன், 5 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon