மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 5 ஜுன் 2019

மீண்டும் செலவா? குமுறும் திமுக நிர்வாகிகள்!

மீண்டும் செலவா? குமுறும் திமுக நிர்வாகிகள்!

கலைஞரின் 96ஆவது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் மற்றும் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கான நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டம் ஜூன் 3ஆம் தேதி மாலை சென்னை நந்தனத்திலுள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்புரையாற்றிய திமுக தலைவர் ஸ்டாலின், “இன்று தலைவர் கலைஞர் அவர்களின் 96ஆவது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுகிறோம். கலைஞரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும்போது நாம் ஆட்சிப் பொறுப்பில் இருக்க போகிறோம்” என்று பேசியிருந்தார்.

வழக்கமாக சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் திமுக கூட்டங்களுக்காகத் தமிழகம் முழுவதிலிமிருந்து தொண்டர்கள் படையெடுத்து வருவர். பொதுக் கூட்டம் நடக்கும் மைதானமே கூட்டத்தில் நிரம்பி வழியும். வாகன நிறுத்துமிடத்தின் பகுதி கார்களால் நிரம்பியிருக்கும். ஆனால், இந்தக் கூட்டத்தில் வழக்கமானதை விட குறைவாகவே கார் பார்க்கிங் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் கூட்டத்தின் பின்புறம் போடப்பட்டிருந்த இருக்கைகளும் காலியாகவே இருந்திருக்கிறது.

இவை ஒருபக்கம் இருக்க, சென்னையில் நடைபெற்றது போலவே தமிழகத்தின் மற்ற வடக்கு, தெற்கு, மத்திய, மேற்கு மண்டலங்களிலும் கலைஞர் பிறந்தநாள் மற்றும் வெற்றி விழா பொதுக் கூட்டம் நடத்த திமுக தலைமை திட்டமிட்டிருக்கிறது. இதுதொடர்பான அறிவிப்பே இன்னும் வெளியாகாத நிலையில், இந்த செய்தி திமுகவின் மாவட்ட நிர்வாகிகளுக்குத் தெரியவந்திருக்கிறது. இப்போதுதான் தேர்தல் முடிந்தது; அதற்குள் இன்னொரு செலவா என்ற முணுமுணுப்பு திமுக நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக திமுக வட்டாரங்களில் விசாரித்தோம்...

ஏற்கெனவே கடந்த எட்டு வருடங்களாக திமுக ஆளுங்கட்சியாக இல்லை. அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சொந்தக் காசை மட்டும்தான் செலவழித்து வருகிறோம். அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடை பயணம், போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊராட்சி சபைக் கூட்டம் எனத் தொடர்ந்து செலவு செய்து வந்தோம். அதோடு தேர்தல் வேறு வந்துவிட்டதால் செலவுகள் அதிகமானது. இடைத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்று நம்பி நாங்களும் கடன் வாங்கி செலவு செய்தோம்.

ஆனால், மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றிபெற்றிருந்தாலும் இடைத் தேர்தலில் ஒன்பது தொகுதிகளை இழந்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்துவிட்டோம். ஏற்கெனவே கடனாளியாகி நிற்கிற நிலையில், தலைமை தற்போது இப்படியான அறிவிப்பை வெளியிடவுள்ளதாகத் தகவல் வந்திருக்கிறது. தலைமையின் அறிவிப்பைத் தட்ட முடியாது. எனவே, இப்போதும் கடன் வாங்கித்தான் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்று புலம்பிவருகிறார்கள் திமுக நிர்வாகிகள்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: அமைச்சர்கள்- எம்.எல்.ஏ.க்களின் செல்போன் ரிப்போர்ட்- அதிர்ந்த எடப்பாடி


செந்தில் பாலாஜி மாடல்: திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் விவாதம்!


ஆட்சிக் கவிழ்ப்பு: மத்திய அரசின் உதவியை நாடும் எடப்பாடி


2.0: சீனாவில் பிரம்மாண்ட ஓப்பனிங்!


இளையராஜா 76: சுவாரஸ்யமான தருணங்கள்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

ஓட்டுக்கு பணம்: மக்களிடம் சத்தியம் வாங்க முடியாது!

2 நிமிட வாசிப்பு

ஓட்டுக்கு பணம்: மக்களிடம் சத்தியம் வாங்க முடியாது!

ரிலாக்ஸ் டைம்: கேழ்வரகு இனிப்பு அடை!

2 நிமிட வாசிப்பு

ரிலாக்ஸ் டைம்: கேழ்வரகு இனிப்பு அடை!

புதன் 5 ஜுன் 2019