மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 5 ஜுன் 2019

விஜய்க்கு இது முதன்முறை!

விஜய்க்கு இது முதன்முறை!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்கள் பலரும் தங்கள் திரைப் பயணத்தில் இரட்டை வேடங்களில் சில படங்களிலாவது நடித்துள்ளனர். அழகிய தமிழ் மகன், மெர்சல் உள்ளிட்ட படங்களில் விஜய்யும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ஒரே காட்சியில் இரு கதாபாத்திரங்களும் தோன்றினாலும் அப்பா - மகன் கதாபாத்திரத்தில் விஜய் ஒரே காட்சியில் நடித்தது இல்லை. தற்போது விஜய் 63 திரைப்படத்தில் அவ்வாறு நடித்துள்ளதாகப் படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

அப்பா - மகன் எனும்போது ஒரு கதாபாத்திரம் வயதான தோற்றத்தில் இடம்பெறும். விஜய் பொதுவாக அதிகமான மேக் அப் மூலம் தோற்றத்தை மாற்றி நடிப்பதில்லை. அந்த வகையில் முதன்முறையாக அப்படியான ஒரு மாற்றத்தை இந்தப் படத்தில் எதிர்பார்க்கலாம்.

பெண்கள் கால்பந்து போட்டியை மையமாகக்கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா இணைந்துள்ளார். இந்துஜா, ரெபா மோனிகா ஜான் உள்ளிட்ட இளம் நடிகைகள் பலர் கால்பந்தாட்ட வீராங்கனைகளாக நடித்துள்ளனர்.

வழக்கமான ஸ்போர்ட்ஸ் டிராமாவுடன் ஆசிட் வீச்சுக்கு எதிரான கருத்துகளையும் படத்தில் கூறியுள்ளனர் என்பது இதற்கு முன் படப்பிடிப்பு தளத்தில் வெளியான புகைப்படங்கள் மூலம் தெரியவந்தது.

சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜூன் 22ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: அமைச்சர்கள்- எம்.எல்.ஏ.க்களின் செல்போன் ரிப்போர்ட்- அதிர்ந்த எடப்பாடி


செந்தில் பாலாஜி மாடல்: திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் விவாதம்!


ஆட்சிக் கவிழ்ப்பு: மத்திய அரசின் உதவியை நாடும் எடப்பாடி


2.0: சீனாவில் பிரம்மாண்ட ஓப்பனிங்!


இளையராஜா 76: சுவாரஸ்யமான தருணங்கள்!

இன்று முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு!

5 நிமிட வாசிப்பு

இன்று முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு!

கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலமாகும்: காரணம் என்ன?

5 நிமிட வாசிப்பு

கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலமாகும்: காரணம் என்ன?

14 மணி நேரம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது!

3 நிமிட வாசிப்பு

14 மணி நேரம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது!

புதன் 5 ஜுன் 2019