மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 22 அக் 2020

இளையராஜா பாடல்களுக்கு தடை!

இளையராஜா பாடல்களுக்கு தடை!

இளையராஜா இசையில் வெளியான பாடல்களை அவரது அனுமதி பெறாமல் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை உறுதிப்படுத்தி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்திருந்த வழக்கில், அகி இசை , எக்கோ மியூசிக், கிரி டிரேடர்ஸ் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் தான் இசையமைத்து வெளியிட்ட பாடல்களை தன்னுடைய அனுமதி பெறாமல் பயன்படுத்துவதாகவும் அந்த பாடலுக்கு தான் முழுமையான உரிமையை பெற்றுள்ளதாகவும் எனவே அந்த பாடல்களை பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஏற்கனவே சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்த்து.

இந்த நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நடத்திய நீதிபதி அனிதா சுமந்த் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நிரந்தரமாக்கி உத்தரவிட்டுள்ளார். அவரது பாடல்களை திரையரங்குகளைத் தவிர வேறு எங்கும் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளார். குறிப்பாக ஆன்லைன் உள்ளிட்ட ரேடியோ நிறுவனங்கள், இசை போட்டிகள் உள்ளிட்டவைகளில் பயன்படுத்தக் கூடாது என்றும், பயன்படுத்தவேண்டும் என்றால் அனுமதி பெறவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே அகி இசை நிறுவனம் இளையராஜாவின் பாடல்களை 10 வருடங்களுக்கு பயன்படுத்த உரிமை உள்ளதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.


மேலும் படிக்க


ஆட்சிக் கவிழ்ப்பு: மத்திய அரசின் உதவியை நாடும் எடப்பாடி


டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி அழைப்பை நிராகரித்த நான்கு எம்.எல்.ஏ.க்கள்!


ஆட்சிக் கவிழ்ப்பு: திமுகவுக்கு அதிமுக தரப்பின் நிபந்தனை!


2.0: சீனாவில் பிரம்மாண்ட ஓப்பனிங்!


இளையராஜா 76: சுவாரஸ்யமான தருணங்கள்!


செவ்வாய், 4 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon