மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

2.0: சீனாவில் பிரம்மாண்ட ஓப்பனிங்!

2.0: சீனாவில் பிரம்மாண்ட ஓப்பனிங்!

ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 2.0 திரைப்படம் சீனாவில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் இணைந்து நடித்த திரைப்படம் 2.0. எந்திரன் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ஷங்கர் - ரஜினி கூட்டணி மீண்டும் இணைந்து இந்தப் படத்தை உருவாக்க திட்டமிட லைகா புரொடக்‌ஷன் தயாரிக்க முன்வந்தது. நவம்பர் மாதம் வெளியாகி வசூல் சாதனை படைத்த இப்படம் தற்போது சீன மொழியில் ஜூன் 12ஆம் தேதி அங்கு 50,000 திரைகளில் வெளியாகவுள்ளது.

ரஜினி நடித்த படம் ஒன்று சீனாவில் அதிக திரைகளில் வெளியாவது இதுவே முதல்முறையாகும். ரஜினி படங்களுக்கு ஜப்பான், மலேசியா ஆகிய நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்தியாவைப் போலவே அங்கும் ரஜினி ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர். சீனாவில் அப்படியான தாக்கத்தை இந்தப் படம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ள நிலையில் சீனாவில் திரையிடும்போது அது மேலும் பலமடங்கு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக சீனாவில் இந்திய படங்களுக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்தியாவைக் கடந்து பெரிய சந்தையாக உள்ள சீனாவை தனது படங்கள் மூலம் தொடர்ந்து தக்கவைத்து வருகிறார் ஆமிர் கான். அந்தவரிசையில் ரஜினி இணைவது 2.0 படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அமையும்.


மேலும் படிக்க


ஆட்சிக் கவிழ்ப்பு: திமுகவுக்கு அதிமுக தரப்பின் நிபந்தனை!


ஆட்சிக் கவிழ்ப்பு பயம்: எம்.எல்.ஏ.க்களுடன் சமாதானம் பேசும் எடப்பாடி


கழற்றிவிடப்படுகிறதோ தமிழகம்?


ஒரு முடிவெடுக்கப் போறேன்: கோபத்தில் வைத்திலிங்கம்


கேட்பது அவனது கீதமே! பறப்பதும் அவன் ஏற்றிய கொடியே!


திங்கள், 3 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon