மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜுன் 2019

தலைமைச்செயலகம்: உடை அணிவதில் கட்டுப்பாடு!

தலைமைச்செயலகம்: உடை அணிவதில் கட்டுப்பாடு!

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் உடை அணிவதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழக தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அணியும் உடைகள் தொடர்பாகப் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், இதற்காகப் பணியாளர் கையேட்டில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

“ஊழியர்கள் நேர்த்தியான, சுத்தமான உடைகளை அணிய வேண்டும். உடைகள் அலுவலகத்தின் நன்மதிப்பைப் பராமரிக்கும் வகையில் இருக்க வேண்டும். சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் ஆகிய உடைகளை மட்டுமே பெண் ஊழியர்கள் அணிய வேண்டும். சேலை தவிர மற்ற உடைகளை உடுத்தும்போது துப்பட்டா அணிவது அவசியம். உடைகளின் நிறம் மெல்லிய வண்ணமாக இருக்க வேண்டும்.

ஆண் பணியாளர்கள் அனைவரும் பேண்ட், சட்டை அணிய வேண்டும். டிசர்ட் அணியக் கூடாது. நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் ஆஜராகும்போது முழு நீள ஸ்லீவ் கொண்ட கோட், டை அணிய வேண்டும்.

அந்த ஆடைகள் மெல்லிய வண்ணத்தில் இருக்க வேண்டும். அடர் வண்ண உடைகளை அணியக் கூடாது.

நீதிமன்றங்களில் பெண் ஊழியர்கள் ஆஜராகும்போது, சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் அணியலாம். சேலை தவிர மற்ற உடைகளை அணியும்போது மெல்லிய வண்ண துப்பட்டா அவசியம்” என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

.

மேலும் படிக்க

.

.

.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!

.

ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!

.

மோடி அமைச்சரவையில் சமூக நீதி எங்கே? - நீதிபதி கேள்வி!

.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?

.

மத்திய அமைச்சரவை: தவிர்க்கப்பட்ட தமிழ்நாடு!

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

3 நிமிட வாசிப்பு

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

2,000 மாணவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டம்! ...

3 நிமிட வாசிப்பு

2,000 மாணவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டம்!

சனி 1 ஜுன் 2019