மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 30 மே 2019

இந்த அச்சம் தேவைதானா?

இந்த அச்சம் தேவைதானா?

நமக்குள் தேடுவோம் 8 - ஆசிஃபா

ஒரு சூழலில் நாம் எப்படி எதிர்வினை ஆற்றுகிறோம் என்பது பல விஷயங்களைத் தீர்மானிக்கிறது. அதைவிட முக்கியமாக, எப்படி ஒரு விஷயத்தை அணுகுகிறோம் என்பது முக்கியம். பரீட்சை எழுதப் போகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். இதில் இரு வேறு மனநிலைகளைக் காண முடியும்.

1. நாம் எவ்வளவு படித்தோம், என்ன படித்தோம், நமக்கு என்ன தெரியும் / தெரியாது என்பதைப் பார்க்கலாம்.

2. பரீட்சையில் ஜெயித்தால் பெருமை; தோற்றால் அவமானம். எப்படி சமாளிக்கப் போகிறோம்? எதற்குத்தான் பரீட்சை எல்லாம் வைக்கிறார்களோ?

இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? ஒன்று, நம்மைப் பெருமளவில் பாதிக்காது; மற்றது, நம் வாழ்க்கை முழுவதும் நம்மைத் தொடர்ந்து வரும். காரணம், பரீட்சை என்பது சின்ன எடுத்துக்காட்டு. அதிலேயே இப்படி நாம் சிந்திக்கிறோம் என்றால், வாழ்க்கையில் எவ்வளவு இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்!

பல சூழல்களில் இரண்டாம் விதமாக யோசிப்பவர்களைப் பார்க்கலாம். அது மருத்துவமனை செக்அப், வாகன நெரிசல், பள்ளிக்கூடம், ATM வாசல், வங்கி வேலையின்போது என்று பல இடங்களிலும் மோசமான scenarioவை மனதில் வைத்துக்கொள்வார்கள். ‘வங்கியில் மணிக்கணக்காக நிற்கப் போகிறோம்’, ‘வாகனம் இங்கேயே இன்று முழுவதும் நிற்கப் போகிறது’, என்பதுபோல யோசிப்பார்கள்.

வங்கி என்றால் கூட்டம் இருக்கத்தான் செய்யும்; சாலை என்றால் நெரிசல் ஏற்படும்; பரீட்சை என்றால் தோல்வி - வெற்றி சகஜம் என்று ஏற்றுக்கொள்ளாத மனநிலை இது. கடந்த காலத்தில் நிகழ்ந்த தவறுகள் அல்லது நம்மை பாதித்த விஷயங்கள், நிகழ்காலத்தில் பிரச்சினையாகிவிடுமோ என்ற பயம், எதிர்காலம் குறித்த குழப்பம் என்று தனிநபரைப் பொறுத்து இந்த காரணங்கள் மாறுபடுகின்றன.

ஒருவரின் இந்த எதிர்மறையைத் தெளிவாகக் காணும் தன்மை, முதலில் அவரைப் பாதிக்கும். தன்னைப் பற்றிய தவறான முன்முடிவுகளை எடுப்பார். அதன் பிறகு, இது சுற்றியிருப்பவர்களைப் பாதிக்கத் தொடங்குகிறது. யார் எதைச் செய்தாலும், “இப்படி ஆயிடுமோ?” என்று குழப்பத் தொடங்குவார்கள். யாரும் இதை வேண்டுமென்று செய்வதில்லை. மாறாக, அது அவர்கள் இயல்பாக மாறிவிடுகிறது.

சிலர் நம் இயல்பை முதலிலேயே கண்டுபிடித்துவிடுகிறோம். அப்படிச் செய்தால், இதிலிருந்து விடுபடச் சின்ன சின்ன மாற்றங்களைச் செய்யத் தொடங்கலாம். எடுத்துக்காட்டாக, ஒவ்வொரு முறை நமக்குப் பொது இடத்தில் எரிச்சல் வரும்போதோ, குழப்பம் ஏற்படும்போதோ, பாடல் கேட்கலாம், அங்குள்ள யாரிடமாவது பேசலாம். கூட்டமாக இருக்கும் இடத்தில் சும்மா இருப்பது எப்படி இருக்கும் என்று அனுபவிக்கலாம்!

நம் சிந்தனைகள் நமக்கும் பிறருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். காரணம், நமக்கு இருப்பதோ சின்ன வாழ்க்கை. அதையும் எரிச்சலிலும் குழப்பத்திலும் இல்லாத பிரச்சனையைப் பற்றிக் கவலைப்படுவதிலும், நாமாக பிரச்சினை உருவாக்குவதிலும் கழிந்துவிடக் கூடாது!

துயரம் உங்களைத் துரத்துகிறதா?

.

.

மேலும் படிக்க

.

.

மோடி அமைச்சரவையில் தமிழகம் இடம் பெறுமா?

.

முதல்வர் மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் பயிற்சி வகுப்பு: முழு ரிப்போர்ட்!

.

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்கு இளைஞரணி: ஸ்டாலினுக்கு நெருக்கடி!

.

என்ன செய்திருந்தால் ராகுல் வென்றிருப்பார்!?

.

துரைமுருகனுக்கு என்னாச்சு?

.

.

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது? ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது?

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

வியாழன் 30 மே 2019