மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 28 நவ 2020

விஜய் 64: மீண்டும் பட்டியலில் ராஷ்மிகா

விஜய் 64: மீண்டும் பட்டியலில் ராஷ்மிகா

விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தானாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தானா. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் அவர் நடிப்பதாக தகவல் பரவியது. அதை அவர் அப்போது மறுத்தார்.

“விஜய் மற்றும் அட்லியின் அடுத்த படத்தில் நான் இருக்கிறேனா என்று நிறைய பேர் என்னிடம் கேட்கிறீர்கள். இந்த முறை அது நடக்கவில்லை. ஆனால், விரைவில் அது நடக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அது குறித்து கடந்த நவம்பர் மாதமே மின்னம்பலத்தில் பதிவு செய்திருந்தோம்.

தற்போது விஜய் நடிக்கும் அடுத்தப் படத்தை மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குவது உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தானாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் விஜய்யுடன் நடிப்பேன் என நம்பிக்கை தெரிவித்த ராஷ்மிகாவுக்கு இந்தப் படம் மூலம் அந்த வாய்ப்பு அமைந்துள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

ராஷ்மிகா தற்போது கார்த்திக்கு ஜோடியாக பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார்.

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்கு இளைஞரணி: ஸ்டாலினுக்கு நெருக்கடி!

.

துரைமுருகனுக்கு என்னாச்சு?

.

நாங்குநேரியில் பீட்டர் அல்போன்ஸ்?

.

96 ஜானுவும் இளையராஜாவின் புரிதலும்!

.

.

டிஜிட்டல் திண்ணை: தோல்வி- தினகரனிடம் சசிகலா கேட்ட கேள்வி!

.

.

.

வியாழன், 30 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon