மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 அக் 2019

தயாராகும் ‘இன்று நேற்று நாளை’ 2!

தயாராகும் ‘இன்று நேற்று நாளை’ 2!

விஷ்ணு விஷால், மியா இருவரும் ஜோடி சேர்ந்து நடித்த படம் இன்று நேற்று நாளை. 2015ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது.

வெற்றிபெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தை இயக்குவது தமிழ் சினிமாவில் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. ஒப்பீட்டளவில் முதல் பாகத்தைப் போல இரண்டாம் பாகம் பெரியளவில் வெற்றி பெறுவதில்லை என்றாலும் இந்த முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்‌ஷன் பாணியில் உருவாகி வெற்றி பெற்ற இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.முதல் பாகத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும், திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்தன.

இரண்டாம் பாகத்தில் மாநகரம், நரகாசூரன் ஆகிய படங்களில் நடித்துள்ள சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். ரவிக்குமாரின் உதவி இயக்குநர் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

ரவிக்குமார் தற்போது சிவகார்த்திகேயனை கதாநாயகனாகக் கொண்டு மற்றொரு சயின்ஸ் பிக்‌ஷன் படத்தை இயக்கிவருகிறார். ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சீமராஜா படத்தை தயாரித்த ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்கு இளைஞரணி: ஸ்டாலினுக்கு நெருக்கடி!

.

துரைமுருகனுக்கு என்னாச்சு?

.

நாங்குநேரியில் பீட்டர் அல்போன்ஸ்?

.

96 ஜானுவும் இளையராஜாவின் புரிதலும்!

.

.

டிஜிட்டல் திண்ணை: தோல்வி- தினகரனிடம் சசிகலா கேட்ட கேள்வி!

.

.

.

வியாழன், 30 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon