மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

உலகக் கோப்பை: நிலவரமும் எதிர்பார்ப்பும்! - 8

உலகக் கோப்பை: நிலவரமும் எதிர்பார்ப்பும்! - 8

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (மே 30) தொடங்குகிறது. முதல் போட்டியில் தொடரை நடத்தும் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன. இந்தத் தொடரில் இந்தியா உட்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளின் நிறை குறைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து மின்னம்பலத்தில் தொடராகப் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று, இரண்டு முறை கோப்பை வென்றுள்ள இந்திய அணியின் நிறை குறைகள் குறித்துக் காண்போம்.

இந்திய அணி

1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணியின் நீண்ட கால தாகம் 2011ஆம் ஆண்டில் மகேந்திர சிங் தோனி தலைமையில் தணிந்தது. அதற்கடுத்த 2015 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியால் வெற்றிபெற முடியவில்லை. இந்த உலகக் கோப்பையில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி அதிக எதிர்பார்ப்போடு களமிறங்குகிறது. ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்திய அணிக்கு இத்தொடர் கடினமான ஒன்றாகவே இருக்கும். நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி தனது சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்திய அணிக்கு நெருக்கடி அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணியின் பலம்

இந்திய அணியின் பலமே அதன் டாப் ஆர்டர்தான். ரோகித் ஷர்மா, ஷிகர் தவன் மற்றும் விராட் கோலி இந்திய அணிக்கு அஸ்திவாரமாக உள்ளனர். தற்போதைய நிலையில் உலகின் தலைசிறந்த முதல் மூன்று நிலை ஆட்டக்காரர்கள் இவர்கள்தாம். இவர்கள் மூவரும் இணைந்து 207 போட்டிகளில் 10,000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர். இந்தியாவைத் தொடர்ந்து இங்கிலாந்தின் டாப் ஆர்டர் சிறப்பாக உள்ளது. இந்திய அணியின் சுழல் கூட்டணியான யுஸ்வேந்திர சஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் இந்திய அணிக்குக் கூடுதல் பலமாகும். அதோடு, ஜஸ்பிரீத் பும்ரா வேகத்தில் ஜொலிக்கிறார்.

பலவீனம்

இந்திய அணியின் மிடில் ஆர்டர் சொதப்பல் மிகப் பெரிய பலவீனமாகும். நம்பர் 4 இடத்தை நிரப்புவது யார் என்ற மிகப் பெரிய கேள்வி உள்ளது. தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் ஷங்கருக்கு இடையே இதில் போட்டி இருக்கிறது. ஆனால், வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் நான்காவது வீரராகக் களமிறங்கி சதம் அடித்த லோகேஷ் ராகுலுக்கு அந்த இடம் வழங்கப்படவும் வாய்ப்பிருக்கிறது. எனினும் இந்திய அணியில் அந்த இடத்தில் ஆடிய அனுபவம் இவர்கள் யாருக்கும் அவ்வளவாக இல்லை. சமீப காலமாக நம்பர் 4 இடத்தில் விளையாடிவந்த அம்பத்தி ராயுடு மோசமான ஃபார்ம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஆல்ரவுண்டர்கள் கேதார் ஜாதவும் விஜய் ஷங்கரும் ஐபிஎல் தொடரில் சிறப்பாகச் செயல்படவில்லை என்பதால் அவர்கள் மீதும் நம்பிக்கை குறைவாகவே உள்ளது. எனினும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோரின் ஐபிஎல் ஃபார்ம் இந்தத் தொடரிலும் தொடர்ந்தால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும். வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரும் சிறிது இடைவெளிக்குப் பிறகு அணிக்குத் திரும்பியுள்ளதால் அவரும் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். பயிற்சிப் போட்டியிலும் அவரது பந்துவீச்சு எடுபடவில்லை.

கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்லுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

உலகக் கோப்பை: நிலவரமும் எதிர்பார்ப்பும்! - 1

உலகக் கோப்பை: நிலவரமும் எதிர்பார்ப்பும்! - 2

உலகக் கோப்பை: நிலவரமும் எதிர்பார்ப்பும்! - 3

உலகக் கோப்பை: நிலவரமும் எதிர்பார்ப்பும்! - 4

உலகக் கோப்பை: நிலவரமும் எதிர்பார்ப்பும்! - 5

உலகக் கோப்பை: நிலவரமும் எதிர்பார்ப்பும்! - 6

உலகக் கோப்பை: நிலவரமும் எதிர்பார்ப்பும்! - 7

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்கு இளைஞரணி: ஸ்டாலினுக்கு நெருக்கடி!

.

துரைமுருகனுக்கு என்னாச்சு?

.

நாங்குநேரியில் பீட்டர் அல்போன்ஸ்?

.

96 ஜானுவும் இளையராஜாவின் புரிதலும்!

.

.

டிஜிட்டல் திண்ணை: தோல்வி- தினகரனிடம் சசிகலா கேட்ட கேள்வி!

.

.

.

வியாழன், 30 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon