மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 28 நவ 2020

மோடி பதவியேற்பு விழா: மம்தா யூடர்ன்!

மோடி பதவியேற்பு விழா: மம்தா யூடர்ன்!

மோடி இரண்டாவது முறையாகப் பிரதமராக நாளை (மே 30) பதவி ஏற்கவுள்ளார். இவ்விழாவில் கலந்து கொள்ள முயற்சிப்பேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்த நிலையில், இன்று பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் மற்றும் பிரச்சாரத்தின் போது மேற்கு வங்கத்தில் திருணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையே ஏற்பட்ட மோதல்கள் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் முடிவில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, தேர்தல் முடிவில் நம்பிக்கை இல்லை என்று மம்தா தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.

இதுகுறித்து நேற்று (மே 28) ஊடகம் ஒன்றிடம் பேசிய மம்தா, “அரசியலமைப்பு மீதான மரியாதையின்படி மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முயற்சிப்பேன்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று பங்கேற்கவில்லை என்று கூறியுள்ளார்.

மோடிக்கு வாழ்த்து தெரிவித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறை காரணமாக 54 பேர் கொல்லப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டும் செய்தி, ஊடகங்களில் வெளியாகி வருகிறது. இது முற்றிலும் தவறானது. மேற்கு வங்கத்தில் அரசியல் ரீதியான கொலைகள் ஏதும் ஏற்பட்டதில்லை. இந்த மரணங்கள் சொந்தப் பகை, குடும்பச் சண்டை போன்றவற்றால் நிகழ்ந்திருக்கக்கூடும். இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை.

என்னை மன்னித்து விடுங்கள் மோடி ஜி. இந்த நிகழ்வு என்னைப் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வேண்டாம் என்று கட்டாயப்படுத்துகிறது. ஜனநாயகத்தைக் கொண்டாடும் பிரம்மாண்ட விழாவை அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்தி அதன் மதிப்பை இழக்கச் செய்யக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: தோல்வி- தினகரனிடம் சசிகலா கேட்ட கேள்வி!

.

.

துரைமுருகனுக்கு என்னாச்சு?

.

நாங்குநேரியில் பீட்டர் அல்போன்ஸ்?

.

96 ஜானுவும் இளையராஜாவின் புரிதலும்!

.

இந்தியன் 2: ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பிய லைகா?

.

.

புதன், 29 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon