மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 29 மே 2019

நாங்குநேரியில் பீட்டர் அல்போன்ஸ்?

நாங்குநேரியில் பீட்டர் அல்போன்ஸ்?

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹெச்.வசந்தகுமார் பதவி விலகியதையடுத்து அங்கு போட்டியிடப்போவது யார் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஹெச்.வசந்தகுமார், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதைத் தொடர்ந்து, இன்று (மே 29) சபாநாயகரிடம் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தைக் கொடுத்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய வசந்தகுமாரிடம், “நாங்குநேரி தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிடுமா அல்லது ஏற்கனவே நடைபெற்ற இடைத்தேர்தல்கள் போல திமுகவே போட்டியிடுமா?” என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு வசந்தகுமார், “ நாங்குநேரி காங்கிரஸின் தொகுதி. இரண்டு முறை அங்கு நான் வெற்றிபெற்றுள்ளேன். திமுக போட்டியிடுமா என்பதனை அகில இந்திய காங்கிரஸ் தலைமையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும் முடிவு செய்வார்கள். காங்கிரஸ் தொகுதி என்பதால் நாங்கள் போட்டியிடுவதற்கான முயற்சிகளை எடுத்துவருகிறோம். நான் சுட்டிக்காட்டும் நபரை வெற்றிபெறவைக்க மக்கள் உதவுவார்கள்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் நாங்குநேரிதொகுதியை மீண்டும் காங்கிரஸே வாங்கி அதில் பீட்டர் அல்போன்ஸ் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் வட்டாரத்தில் தகவல்கள் உலவி வருகின்றன.

இதுதொடர்பாக விசாரித்தபோது, “18 தொகுதி இடைத்தேர்தலின்போது காங்கிரஸ் போட்டியிட்டுத் தோற்ற சோளிங்கர், ஓசூர் தொகுதிகளை திமுக எடுத்துக் கொண்டது. ஆனால் நாங்குநேரி காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் அதில் காங்கிரஸ் போட்டியிடுவதே சரியாக இருக்கும். மேலும் காங்கிரஸ் வேட்பாளராக பீட்டர் அல்போன்ஸ் போட்டியிடும் பட்சத்தில் திமுகவும் எதிர்ப்பு தெரிவிக்காது. அவர் திமுக தலைமைக்கும் நெருக்கமானவர்தான்.

நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலின்போது நெல்லை தொகுதியில் போட்டியிடுவதற்காக வாய்ப்பு கேட்டிருந்தார் பீட்டர் அல்போன்ஸ். இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினையும் சந்தித்து வலியுறுத்தியிருந்தார். ஆனால், கன்னியாகுமரி, நெல்லை ஆகியவை அடுத்தடுத்த தொகுதிகளாக இருப்பதாலும், ஏற்கனவே தென்மாவட்டங்களில் காங்கிரஸுக்கு விருதுநகர், தேனி, சிவகங்கை, கன்னியாகுமரி என 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டதாலும் நெல்லையை திமுகவே வைத்துக்கொண்டது. இந்நிலையில் நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் பட்சத்தில் காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளது” என்கிறார்கள் தமிழக காங்கிரஸ் வட்டாரங்களில்.

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: தோல்வி- தினகரனிடம் சசிகலா கேட்ட கேள்வி!

.

.

இந்தியன் 2: ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பிய லைகா?

.

96 ஜானுவும் இளையராஜாவின் புரிதலும்!

.

பதவி விலகல்: ராகுலிடம் சமாதானம் பேசும் பிரியங்கா

.

மார்க்சிஸ்ட்டுகளின் படுதோல்விக்குக் காரணம் என்ன?

.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!

5 நிமிட வாசிப்பு

சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!

டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட்?

5 நிமிட வாசிப்பு

டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட்?

புதன் 29 மே 2019