மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 29 மே 2019

பதவி விலகல்: ராகுலிடம் சமாதானம் பேசும் பிரியங்கா

பதவி விலகல்: ராகுலிடம் சமாதானம் பேசும் பிரியங்கா

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நாடு தழுவிய படுதோல்வியை அடுத்து அக்கட்சியின் தலைவரான ராகுல் காந்தி, தனது பதவியை ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் காரிய கமிட்டியில் தெரிவித்தார்.

மூத்த தலைவர்கள் பலரும் சமாதானம் செய்தும் இறங்கிவராத ராகுல் நேற்றும் யாரையும் சந்திக்க வரவில்லை.

கடந்த 25 ஆம் தேதி நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ததோடு நேரு குடும்பத்துக்கு வெளியே காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் பரவின. மேலும் ப.சிதம்பரம், கமல்நாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தனக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் வேதனை தெரிவித்தார் ராகுல். இதையெல்லாம் காங்கிரஸ் மறுத்தாலும், ராகுல் தொடர்ந்து தனது பதவி விலகல் முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.

நேற்றும் அவரை சந்திக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சென்றபோதும் ராகுல் அவர்களோடு பேச மறுத்துவிட்டார். “ஒரு மாதம் கூட எடுத்துக் கொள்ளுங்கள். எங்கள் குடும்பத்தைச் சேராத நபராக பார்த்து தலைவராகத் தேர்ந்தெடுங்கள்:” என்று ராகுல் சொல்லிவிட்டாராம்.

இந்நிலையில் இப்போது பிரியங்கா காந்தி மட்டுமே ராகுலை சமாதானப்படுத்தும் நோக்கில் அவரை சந்தித்து வருகிறார்.

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: தோல்வி- தினகரனிடம் சசிகலா கேட்ட கேள்வி!

.

.

தேர்தல் முடிவு: சசிகலா ரியாக்ஷன்!

.

திமுக: ராஜ்ய சபாவுக்குச் செல்பவர்கள் யார்?

.

டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்களா, தொண்டர்களா? முடிவுக்கு வந்த ஸ்டாலின்

.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் எப்போது: ஸ்டாலின் பதில்!

.

.

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

புதன் 29 மே 2019