மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 29 மே 2019

இந்தியன் 2: ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பிய லைகா?

இந்தியன் 2: ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பிய லைகா?

இந்தியன் 2 திரைப்படம் தொடர்பாக அதன் தயாரிப்பு நிறுவனமான லைகா, இயக்குநர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 2.0. ரஜினி, எமி ஜக்சன் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் உலகெங்கிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர் ஷங்கர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2வை இயக்குவதாக அறிவித்தார். அதன்படி படத்தின் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்தியன் 2 திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் படத்தின் முதல் கட்ட பிடிப்பு முடிந்த கையோடு அதன் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஷங்கர் படத்தின் மொத்த பட்ஜெட் விவரத்தைத் தயாரிப்பு நிறுவனத்திடம் சமர்ப்பிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், படத்தில் கமல்ஹாசனின் மேக்கப் மிக முக்கியமானது. எனவே முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட குழு சரியாகச் செய்யவில்லை என வேறொரு குழுவை ஷங்கர் ஒப்பந்தம் செய்துள்ளார். மேற்கூறிய காரணங்களால் லைகா நிறுவனத்தால் படத்துக்குத் தேவையான தொகையைச் சரியான நேரத்தில் ஒதுக்கமுடியாததால் படப்பிடிப்பு அடுத்த கட்டத்துக்கு நகராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது.

பின்னர் கமல்ஹாசன் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட தனது கட்சிகாரர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய சென்றதால் படப்பிடிப்பு தொடங்குவதில் மேலும் தாமதம் ஆனது. இந்த நிலையில், ஷங்கர் தனது அடுத்த படத்துக்கான வேலையில் இறங்கியுள்ளதாகவும், இது சம்பந்தமாக இரண்டு தயாரிப்பாளர்களையும், தெலுங்கு நடிகர் பிரபாஸையும் அணுகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையறிந்த லைகா நிறுவனம் உடனடியாக ஷங்கருக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், “மற்ற வேலைகளையெல்லாம் கைவிட்டுவிட்டு உடனடியாக இந்தியன் 2 படப்பிடிப்பைத் தொடங்குங்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதற்கிடையில் கமல்ஹாசன் தனது அரசியல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனைத் தொகுத்து வழங்க உள்ளார். இதன் படப்பிடிப்பு வாரக் கடைசியில் இருக்கும் என்பதால் இந்தியன் 2 படப்பிடிப்பு எப்பொழுது தொடங்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: தோல்வி- தினகரனிடம் சசிகலா கேட்ட கேள்வி!

.

.

தேர்தல் முடிவு: சசிகலா ரியாக்ஷன்!

.

திமுக: ராஜ்ய சபாவுக்குச் செல்பவர்கள் யார்?

.

டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்களா, தொண்டர்களா? முடிவுக்கு வந்த ஸ்டாலின்

.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் எப்போது: ஸ்டாலின் பதில்!

.

இன்று முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு!

5 நிமிட வாசிப்பு

இன்று முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு!

கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலமாகும்: காரணம் என்ன?

5 நிமிட வாசிப்பு

கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலமாகும்: காரணம் என்ன?

14 மணி நேரம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது!

3 நிமிட வாசிப்பு

14 மணி நேரம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது!

புதன் 29 மே 2019