மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 28 மே 2019

டிஜிட்டல் திண்ணை: தோல்வி- தினகரனிடம் சசிகலா கேட்ட கேள்வி!

டிஜிட்டல் திண்ணை: தோல்வி- தினகரனிடம் சசிகலா கேட்ட கேள்வி!

மொபைல் டேட்டா ஆனில் இருந்து. வாட்ஸ் அப் ஆன்லைனில் இருந்தது.

தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல் முறையாக இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைக்கு சென்று சசிகலாவை தினகரன் சந்திக்கிறார் என்ற செய்தி மின்னம்பலத்தில் 1 மணி பதிப்பில் வந்திருந்தது. அதன் டீடெயிலான ரிப்போர்ட்டை வாட்ஸ் அப் டைப் செய்தது.

“இன்று முற்பகல் 12 மணிக்கு சிறைக்குள் சென்றனர் தினகரன், விவேக், கொடநாடு எஸ்டேட் மேனேஜர் நடராஜன், ஸ்ரீபெரும்புதூர் பெருமாள், கார்த்திக் ஆகியோர். சரியாக 1.20 மணிக்கு எல்லாரும் வெளியே வந்துவிட்டார்கள். இவர்களில் தினகரன் மட்டுமே சுமார் அரைமணி நேரம் சசிகலாவோடு தனியாக பேசிக் கொண்டிருந்தார்.

தினகரன் உள்ளே சென்று சசிகலாவை பார்த்தவுடனேயே வருத்தமாக இருந்த சசிகலா, ’இத்தனை நாளா நம்ம மேல அவங்களுக்கு ஒரு பயம் இருந்துச்சு. ஆனா தேர்தல் ரிசல்ட்டைப் பார்த்து எனக்கு ஷாக் ஆயிடுச்சு. என்னாச்சு? அவங்களுக்கு நம்ம மேல உள்ள பயம் போயிடுமா?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு தன் கையில் கொண்டு போயிருந்த காகிதங்களையே காட்டி பதில் சொல்லியிருக்கிறார் தினகரன்.

‘அப்படி நினைக்காதீங்க. நம்ம மேல பயம் இருக்குற காரணத்தாலதான் பயங்கரமா தில்லுமுல்லு பண்ணியிருக்காங்க. அதனால இந்த தேர்தல்ல நமக்கு விழுந்த ஓட்டெல்லாம் யாருக்கோ போற மாதிரி செட் பண்ணியிருக்காங்க. நான் சும்மா இதெல்லாம் சொல்லலை’ என்ற தினகரன் நிர்வாகிகளிடம் இருந்து வந்த நூற்றுக்கணக்கான பூத் ரிப்போர்ட்டை சசிகலாவிடம் காட்டியிருக்கிறார். 30 தொகுதிகள்ல 588 பூத்ல நமக்கு சீரோ ஓட்டு விழுந்திருக்கு. ஆனா அத்தனை பூத்கள்லயும் நம்ம பூத் ஏஜெண்ட்டுகள், அவங்க குடும்பத்தினர், நம்ம நிர்வாகிகள் குடும்பத்தினர் ஓட்டே நூறுக்கு மேல இருக்கும். நான் ரிசல்ட்டுக்கு மறுநாள் வாக்கிங் போறப்ப என்கிட்டயே பலர் வந்து என்ன சார் நாங்க உங்களுக்குதான் ஓட்டுப் போட்டோம்., இப்படி ஆயிடுச்சுனு கேட்டாங்க. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில நம்ம குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் பையன் தான் பூத் ஏஜெண்டு. ஆனா அவர் ஓட்டே நமக்கு விழலைனு மெஷின் காட்டுது. அமமுக பத்தி தேர்தலுக்குப் பிறகு கிடைச்ச சர்வேயை வச்சு மெஷின்ல ஏதோ பண்ணிட்டாங்க. மத்தப்படி இது நம்மளோட உண்மையான பலம் இல்லை. பிஜேபியை நாம தொடர்ந்து எதிர்க்கிறதாலதான் இப்படி பண்றாங்க’ என்று சொல்லியிருக்கிறார் தினகரன்.

அதற்கு சசிகலா, ‘இதையெல்லாம் பிரஸ்ல சொல்லியாச்சா?’ என்று சசிகலா கேட்க, ‘இதுவரைக்கும் கிடைச்ச விவரத்தை எல்லாம் சொல்லிட்டேன். இதை இப்போ வெளியேபோய் பார்க்கும்போது சொல்லிடறேன்’ என்று சொல்லியிருக்கிறார். அப்போது சசிகலா, ‘இப்ப வெளியே போய் ஒரேயடியா தேர்தல் கமிஷனை திட்டாதீங்க’ என்று சொல்லியிருக்கிறார். அதன் பிறகு அமமுகவின் ஆலோசனைக் கூட்டத்தில் பேச வேண்டிய விஷயங்கள் குறித்தெல்லாம் சசிகலாவுடன் பேசிவிட்டு வெளியே வந்தார் தினகரன்.

தினகரனை அனுப்பிவிட்டு விவேக்குடன் பத்து நிமிடங்கள் பேசிய சசிகலா பின் எல்லாரையும் சேர்த்து வைத்து அறிவுரை சொல்லியிருக்கிறார். அதன் பின் 15 நிமிடங்கள் கொடநாடு எஸ்டேட் மேனேஜர் நடராஜனிடம் தனியாக பேசியிருக்கிறார் சசிகலா. அப்போது கொடநாடு டாக்குமெண்ட் பற்றிய சில முக்கியத் தகவல்கள் பேசப்பட்டதாக சொல்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்றுவிட்ட நிலையில் கொடநாட்டுக்கு ஏதும் சிக்கல்கள் வந்துவிடக் கூடாது என்றும் அதன் ரீதியாகத்தான் சில அட்வைஸ்களை நடராஜனுக்கு சசிகலா சொல்லியிருக்கிறார் என்றும் அமமுக வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

சசிகலாவை தினகரன் சந்திக்கும்போதெல்லாம் கூடவே இருக்கும் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி இன்று தினகரனோடு செல்லவில்லை. அதுபற்றியும் அமமுகவில் சலசலப்புகள் கிளம்பியிருக்கின்றன” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

.

.

மேலும் படிக்க

.

.

தேர்தல் முடிவு: சசிகலா ரியாக்ஷன்!

.

திமுக: ராஜ்ய சபாவுக்குச் செல்பவர்கள் யார்?

.

டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்களா, தொண்டர்களா? முடிவுக்கு வந்த ஸ்டாலின்

.

மோடி பதவியேற்பு விழா: யாருக்கெல்லாம் அழைப்பு?

.

ராகுல் பிடிவாதம்: அடுத்த காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங்?

.

.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!

5 நிமிட வாசிப்பு

சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!

டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட்?

5 நிமிட வாசிப்பு

டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட்?

செவ்வாய் 28 மே 2019