மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 28 நவ 2020

ராஜினாமா எண்ணத்தை விட்டுவிடுங்கள்: ராகுலுக்கு ஸ்டாலின்

ராஜினாமா எண்ணத்தை விட்டுவிடுங்கள்: ராகுலுக்கு ஸ்டாலின்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்ய உறுதியாக இருப்பதாகத் தகவல் வெளியாகிவரும் நிலையில், பதவியிலிருந்து விலகும் எண்ணத்தை விட்டுவிடுங்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் 52 இடங்களை மட்டுமே கைப்பற்றி காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்தது. கட்சியின் தலைவராக ராகுல் பொறுப்பேற்ற பிறகு நடந்து முடிந்த 5 மாநில சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் வென்றது. மினி மக்களவைத் தேர்தல் என்று கூறப்பட்ட தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 17ஆவது மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை கட்சி வட்டாரத்தில் ஏற்பட்டது. ஆனால் அதற்கு மாறாக தோல்வியைச் சந்தித்தது காங்கிரஸ். இந்நிலையில் தோல்விக்குப் பொறுப்பேற்று தனது பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் தெரிவித்ததாகத் தகவல் வெளியானது.

ராகுல் காந்தி பதவியை ராஜினாமா செய்வதில் உறுதியாக இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் அவரது சகோதரியும், கிழக்கு உபி பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி ஈடுபட்டிருக்கிறார். இதற்காக இன்று (மே 28) ராகுல் காந்தி வீட்டுக்கு சென்று அவரை நேரில் சந்தித்து , ராஜினாமா முடிவைக் கைவிட்டு கட்சியின் வளர்ச்சிக்கு உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். சச்சின் பைலட், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா உள்ளிட்ட தலைவர்களும் ராகுல் காந்தியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், ராகுல் காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ”தேர்தலில் தோல்வியுற்றிருந்தாலும், மக்களின் மனங்களை வென்றுள்ளீர்கள். எனவே, தலைவர் பதவியில் இருந்து விலகும் எண்ணத்தை விட்டுவிடுங்கள்” என்று கூறியுள்ளார்.

அதேநேரம் திமுகவின் வெற்றிக்கு ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

.

.

மேலும் படிக்க

.

.

தேர்தல் முடிவு: சசிகலா ரியாக்ஷன்!

.

திமுக: ராஜ்ய சபாவுக்குச் செல்பவர்கள் யார்?

.

டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்களா, தொண்டர்களா? முடிவுக்கு வந்த ஸ்டாலின்

.

மோடி பதவியேற்பு விழா: யாருக்கெல்லாம் அழைப்பு?

.

ராகுல் பிடிவாதம்: அடுத்த காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங்?

.

.

.

செவ்வாய், 28 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon