மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 16 செப் 2019

அருண் விஜய் படத்துக்கு டைட்டில் ரெடி!

அருண் விஜய் படத்துக்கு டைட்டில் ரெடி!

தமிழ்த் திரையுலகின் இளம் இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் நரேன் தனது முதல் படமான துருவங்கள் பதினாறு வாயிலாக ரசிகர்களிடையே வெகுவான வரவேற்பைப் பெற்றார். அதைத்தொடர்ந்து அவர் இயக்கிய நரகாசுரன் திரைப்படம் சில பிரச்சினைகளால் தற்காலிகமாக முடங்கியது. இருந்தாலும், கார்த்திக் நரேன் தனது அடுத்த படத்துக்கான பணிகளைத் தொடங்கிவிட்டார். இந்தப் படத்தில் கதாநாயகனாக அருண் விஜய் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிலையில், படத்துக்கு ‘மாபியா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இதற்குமுன் மகிழ் திருமேனி இயக்கிய தடம் படத்தில் கதாநாயகனாக அருண் விஜய் நடித்திருந்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மறுபுறம், திமிரு புடிச்சவன் படத்தில் நிவேதா பெத்துராஜ் பிஸியாக இருக்கிறார். கார்த்திக் நரேன் தனது கையில் ‘நாடக மேடை’ என்ற மற்றொரு படத்தையும் வைத்திருக்கிறார். இந்தப் படம் முழுக்க முழுக்க காமெடி கதைக்களம் கொண்ட படமாக உருவாக்கப்படவுள்ளது.

நரகாசுரன் படத்தை தயாரித்த கவுதம் மேனனுக்கும், கார்த்திக் நரேனுக்கும் இடையே சில பிரச்சினைகள் ஏற்பட்டது. படம் தாமதமாவதற்கு கவுதம் மேனன்தான் காரணம் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் கார்த்திக் நரேன். இதன்பின் படத்திலிருந்து வெளியேறிய கவுதன் மேனன் தயாரிப்பு பொறுப்புகளை மற்றொரு நிறுவனத்திடம் ஒப்படைத்தார்.

.

.

மேலும் படிக்க

.

.

ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?

.

அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!

.

.

இடைத்தேர்தல் தோல்வி: நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

.

திருநாவுக்கரசர் மீது திமுக அதிருப்தி!

.

.

வாக்குகளை வழிப்பறி செய்துள்ளது திமுக அணி: ராமதாஸ்

.

.

திங்கள், 27 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon