மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

நான் இன்று பிறக்காமலா இருப்பேன்?

நான் இன்று பிறக்காமலா இருப்பேன்?

ஒரு கப் காபி!

ஐந்தாம் வகுப்புத் தேர்வை எழுதிவிட்டோம். கோடை விடுமுறையைக் கொண்டாட்டமாக நண்பர்களுடன் கழித்துவிட்டு, அடுத்த ஆண்டுக்குத் தேவையான புதிய பைகள், அரை டிரவுசரிலிருந்து முழுக்கால் டிரவுசர் என முன் தயாரிப்புகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் ஆறாம் வகுப்புக்குள் அடியெடுத்து வைக்கும் சமயத்தில், வலுக்கட்டாயமாக மீண்டும் அதே பாடத்திட்டம், அதே பெஞ்ச் என ஐந்தாம் வகுப்புக்குள் நம்மை அமர வைத்தால் எப்படி இருக்கும்?

காலம் அப்படித்தான். எடுத்த பாடத்தையே மீண்டும் மீண்டும் எடுத்துக்கொண்டேயிருக்கிறது. தவிர்க்கவே முடியாத சில ஏமாற்றங்களைச் சகித்துக்கொண்டு நம்மை முன்னெடுக்க, இழந்த நம்பிக்கைகளை மீட்டெடுக்க சில கட்டுக் கதைகளைச் சொல்லியாவது சாகச மனதை தக்கவைக்க வேண்டியிருக்கிறது. ‘த ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்ஷன்’ படத்தில் வரும் ஆன்டிபோல.

இரட்டை ஆயுள் தண்டனைக் கைதியான ஆன்டி, தனது தண்டனைக் காலத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் சமயத்தில் சிறைவாசியான ‘ரெட்’டின் நட்பு கிடைக்கிறது. வெளியிலிருந்து சிறையில் இருப்பவர்களுக்குக் கள்ள வணிகம் செய்பவர்களுடன் ரெட்டுக்குத் தொடர்பு இருப்பதை ஆன்டி கண்டறிகிறான். ரெட் பற்றி அறிந்து, அவரிடம் நெருக்கமாகும் ஆன்டி சிறிய சிற்பம் செதுக்க உதவும் மிகச் சிறிய உளியை வாங்கிக்கொள்கிறான். பிறகு அவனது சிறைச் சுவருக்காக முழு அளவு ஹாலிவுட் நாயகியின் சுவரொட்டியை ரெட்டிடம் கேட்கிறான்.

சிறையிலிருந்து தப்பித்து மெக்ஸிகோவிலிருக்கும் கடற்கரை நகரத்தில் தனது இறுதியாண்டுகளைக் கழிக்கப் போகிறேன் என ரெட்டிடம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கிறான். எப்போதுமே நிறைவேறாத அவனுடைய கனவு அது. என்றாலும் தன்னுடைய மனதை எந்தவிதமான சோர்வும் அவநம்பிக்கையும் அண்டாதவாறு ஏதோவொரு விஷயத்தில் எப்போதும் ஈடுபடுத்திக்கொள்கிறான். களைப்படைவதில்லை, அகமன எண்ணச் சிதறல்களை யாரிடமும் வெளிப்படுத்துவதில்லை, எழுதப்படாத வெள்ளைக் காகிதம் போல சிறைச் சுவர்கள் பயம்கொள்ள வைத்தாலும் புன்னகையையே தன் கவசமாக அவன் அணிந்திருக்கிறான்.

ஒரு நாள் வரிசை அழைப்பில் ஆன்டியின் சிறையறை காலியாக இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. சிறை வார்டன் ஆன்டியின் சிறை சுவரொட்டியை விலக்கிப் பார்க்க பெரும் துளை கண்ணில் படுகிறது, கல் ஒன்றை எறிகிறார்; அந்தக் கல் சுவரொட்டியின் வழியே கிழித்துச் செல்கிறது. அங்கொரு சுரங்க வழி வெளிப்படுகிறது. ஆன்டி கடந்த இருபது ஆண்டுகளாகக் கல் சுத்தியலைப் பயன்படுத்தித் தோண்டியதன் மூலம் அச்சிறையிலிருந்து தப்பிக்க இடமேற்படுத்திக்கொண்டது தெரியவந்தது. ஆன்டி சிறையிலிருந்து தப்பித்து, மெக்ஸிகோவில் உள்ள ஒரு கடற்கரை கிராமத்தில் தனக்கான நிம்மதியான சுதந்திர வாழ்வை அனுபவிக்கத் தொடங்குகிறான்.

ஏமாற்றமெனும் இருள் சுவர் மேலெழும்பி அழுத்தம் கொடுத்தாலும், நம்பிக்கையாலும் தளராத தொடர் உழைப்பாலும் அனைத்தையும் தகர்க்கலாம். ஆன்டி போல!

நேற்று என்னைக் கொன்றீர்கள்.

அதற்காக

நான் இன்று பிறக்காமலா இருப்பேன்?

- வண்ணதாசன்

- முகேஷ் சுப்ரமணியம்

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல்.ஏ.க்களை இழுக்க எடப்பாடி தீவிரம்!

.

ஓ.பன்னீரின் 'பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி

.

மத்திய அமைச்சராகிறார் ஹெச்.ராஜா?

.

.

மகனுக்கு கப்பல் துறை கேட்கும் பன்னீர்?

.

தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!

.

.

.

ஞாயிறு, 26 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon