மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

கிட்ஸ் ஸ்பெஷல்: திடீர் போண்டா

கிட்ஸ் ஸ்பெஷல்: திடீர் போண்டா

கோடை விடுமுறையில் குறிப்பிட்ட உறுப்பினர்களுடன் ஆட்டம்பாட்டம் கொண்டாட்டமாக இருக்கும் நம் வீடு, சில நேரங்களில் நிறைய குழந்தைகள் ஒன்று சேர்ந்தால் திண்டாட்டமாகிவிடும். என்ன சமைத்துத் தரலாம் என யோசிக்கத் தொடங்கி விடுவோம். அப்படிப்பட்ட நேரங்களில் உதவும் இந்த திடீர் போண்டா.

என்ன தேவை?

இட்லி மாவு - ஒரு கப்

கடலை மாவு - 2 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - கால் டீஸ்பூன்

இஞ்சி - பச்சை மிளகாய் துண்டுகள் - ஒரு டீஸ்பூன்

கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு

கேரட் - வெங்காயம் (துருவியது) - 4 டீஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை விட்டு கடலை மாவு, மிளகாய்த் தூள், இஞ்சி - பச்சை மிளகாய் துண்டுகள், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை. கேரட் - வெங்காய துருவல், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, இட்லி மாவு கலவையில் சிறிது எடுத்து உருட்டினாற் போல போடவும். வெந்து மேல் வரும் திருப்பி விடவும். பொன்னிறமாக வெந்ததும் எண்ணெயை வடித்து அரித்து எடுக்கவும்.

என்ன பலன்?

எளிதில் ஜீரணமாகும் இந்த உணவு, குழந்தைகளுக்கு மட்டுமல்ல... அனைவருக்கும் ஏற்றது. மாலை நேர உணவாக இதைப் பரிமாறினால் இரவு உணவை அதிகம் சமைக்க வேண்டிய அவசியம் இருக்காது.

நேற்றைய ரெசிப்பி: ஆலு பனீர் சாட்

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல்.ஏ.க்களை இழுக்க எடப்பாடி தீவிரம்!

.

ஓ.பன்னீரின் 'பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி

.

மத்திய அமைச்சராகிறார் ஹெச்.ராஜா?

.

.

மகனுக்கு கப்பல் துறை கேட்கும் பன்னீர்?

.

தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!

.

.

.

ஞாயிறு, 26 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon