மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

தேர்தல் நடத்தை விதிகள் தளர்வு!

தேர்தல் நடத்தை விதிகள் தளர்வு!

17ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகளும், ஆந்திரம், ஒடிசா, சிக்கிம் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் வெளியாகிவிட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக தளர்த்தப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மார்ச் 10ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டது. இந்தியா முழுவதும் தேர்தல் ஆணையத்தால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வாகன சோதனை போன்றவற்றால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் சங்கம் குற்றம்சாட்டியது. மேலும், பிரச்சாரங்களின்போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் மேனகா காந்தி உள்ளிட்டோருக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்தது. மேலும், அவர்கள் பிரச்சாரம் நடத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு பணிகள் நடைபெற்றன. மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. நேற்று (மே 25) டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் கூட்டத்தில் நாடாளுமன்றக் குழு தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார் நரேந்திர மோடி. 17ஆம் மக்களவை தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உள்ளிட்ட தேர்தல் ஆணைய அதிகாரிகள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் சமர்ப்பித்தனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக தளர்த்தப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல்.ஏ.க்களை இழுக்க எடப்பாடி தீவிரம்!

.

இடைத்தேர்தல் தோல்வி: நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

.

திருநாவுக்கரசர் மீது திமுக அதிருப்தி!

.

.

வாக்குகளை வழிப்பறி செய்துள்ளது திமுக அணி: ராமதாஸ்

.

விஜயகாந்த், கமல், சீமான்: மாற்று அரசியல் மாய்மாலங்கள்!

.

.

.

ஞாயிறு, 26 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon