மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

233 எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்!

233 எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்!

17ஆவது மக்களவைக்குத் தேர்வான 233 எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.

17ஆவது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் முடிவில் மீண்டும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் எம்.பி.க்கள் மீதான கிரிமினல் வழக்குகள் தொடர்பான விவரங்கள் தெரியவந்துள்ளன. தேர்தல் தொடர்பான விவரங்களை ஆராய்ந்து வெளியிட்டுவரும், அரசு சாரா அமைப்பான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்), தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்துள்ளது. இதன் முடியில் மக்களவைக்குத் தேர்வான இரண்டில் ஒருவர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது ஏடிஆர் ஆய்வின் மூலம், “தேர்தலில் வெற்றி பெற்ற 542 பேரில் 539 பேரின் பிரமாணப் பத்திரத்தை ஆய்வு செய்ததில், 233 பேர் (43%) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 2009இல் 30 சதவிகிதம் பேர் மீதும், 2014 தேர்தலில் 34 சதவிகிதம் பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் இருந்துள்ளது. ஆனால், இவை தற்போது அதிகரித்துள்ளது. தற்போது 30 பேர் மீது கொலை வழக்குகளும், 19 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளும் உள்ளன.

மாநிலங்கள் அளவில் பொறுத்தவரை கேரளாவில் மொத்தமுள்ளவர்களில் 90 சதவிகித எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. கேரளாவைத் தொடர்ந்து பிகாரில் 82 சதவிகிதம் பேர் மீதும், தெலங்கானாவில் 52 சதவிகிதம் பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன” என்று தெரியவந்துள்ளது. குறிப்பாக, பாஜக சார்பில் வென்ற 303 பேரில் 116 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது. இதில் ஒருவர் மீது பயங்கரவாத வழக்கும் உள்ளது என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல்.ஏ.க்களை இழுக்க எடப்பாடி தீவிரம்!

.

ஓ.பன்னீரின் 'பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி

.

மத்திய அமைச்சராகிறார் ஹெச்.ராஜா?

.

.

மகனுக்கு கப்பல் துறை கேட்கும் பன்னீர்?

.

தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!

.

.

.

ஞாயிறு, 26 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon