மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

ரெட்மி 7ஏ: ஷோமியின் பட்ஜெட் பிளான்!

ரெட்மி 7ஏ: ஷோமியின் பட்ஜெட் பிளான்!

ரெட்மி நோட் 7, ரெட்மி நோட் 7 ப்ரோ, ரெட்மி நோட் 7எஸ், ரெட்மி ஒய்3, ரெட்மி கோ, ரெட்மி 7 என வரிசையாக மொபைல்களை வெளியிட்டுவந்த ஷோமி நிறுவனம் தற்போது ரெட்மி 7ஏ என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்குமுன் பட்ஜெட் பிரிவில் வெளியான ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனுக்கு அடுத்தபடியாக இந்த 7ஏ வெளியாகியுள்ளது. சீனாவில் ரெட்மி 7ஏ விரைவில் வெளியாகவுள்ளது. அதன்பின் இந்தியாவிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் வெளியான ரெட்மி 6ஏ ரூ.10,000 விலை வரம்பிற்குள் அதிகபட்சமாக விற்பனையான ஸ்மார்ட்போனாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் வடிவைப்பு ரீதியாகப் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டுள்ளது ஷோமி. இந்த ஸ்மார்ட்போனில் 5.45 அங்குல எல்சிடி தொடுதிரை உள்ளது. மேலும் ஸ்னாப்ட்ராகன் 439 பிராசஸார் உள்ளது. ஸ்டோரேஜ் தொடர்பான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆண்ட்ராய்ட் பை வெர்ஷனில் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. இந்த மொபைலில் 13 மெகாபிசல் பின்புற கேமராவும், 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு கேமராக்களிலுமே செயற்கை நுண்ணறிவு வசதிகள் உள்ளன.

பட்ஜெட் மொபைலாக இருந்தாலும் இந்த மொபைலில் face unlock வசதி உள்ளது. எனினும் இதில் fingerprint unlock வசதி இல்லை. இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமே பேட்டரிதான். 4000mAh திறன் கொண்ட பேட்டரி இந்த மொபைலில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மொபைலின் விலை பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. எனினும் இதன் விலை ரூ.10,000க்கும் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல்.ஏ.க்களை இழுக்க எடப்பாடி தீவிரம்!

.

ஓ.பன்னீரின் 'பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி

.

மத்திய அமைச்சராகிறார் ஹெச்.ராஜா?

.

.

மகனுக்கு கப்பல் துறை கேட்கும் பன்னீர்?

.

தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!

.

.

.

ஞாயிறு, 26 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon