மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

1,900 இந்தியர்களுக்கு வேலை!

1,900 இந்தியர்களுக்கு வேலை!

சுவிட்சர்லாந்து நாட்டு வங்கி, இந்தியாவில் சுமார் 1,900 இந்தியர்களுக்குச் சென்ற ஆண்டில் வேலை வழங்கியுள்ளது.

சுவிஸ் வங்கியான யூபிஎஸ், இந்தியாவின் புனே மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் தொழில்நுட்ப மையங்களை இயக்கி வருகிறது. அந்த மையங்களில் சென்ற ஆண்டில் மட்டும் 1,900 இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளதாக அவ்வங்கி தெரிவித்துள்ளது. அதன் தொழில்நுட்ப மையங்களில் ஓர் ஆண்டில் வழங்கப்பட்ட அதிகபட்ச வேலைவாய்ப்பு இதுவே ஆகும். தற்போது அதன் மையங்களில் மொத்தம் 4,000 பேர் வரையில் பணியாற்றுகின்றனர்.

சீனா, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் யூபிஎஸ் வங்கிக்குத் தொழில் தீர்வு மையங்களும் (business solutions centre) இருக்கின்றன. யூபிஎஸ் வங்கியின் தொழில் தீர்வு மையங்களில் மொத்தம் 3,115 பேர் பணியாற்றுகின்றனர். அதில் இந்தியாவில் 1,893 பேரும், போலந்து நாட்டில் 822 பேரும் பணிபுரிவதாக அவ்வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டில் இந்தியாவில் யூபிஎஸ் வங்கிக்கு 750 பணியாட்கள் மட்டுமே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல்.ஏ.க்களை இழுக்க எடப்பாடி தீவிரம்!

.

ஓ.பன்னீரின் 'பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி

.

மத்திய அமைச்சராகிறார் ஹெச்.ராஜா?

.

.

மகனுக்கு கப்பல் துறை கேட்கும் பன்னீர்?

.

தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!

.

.

.

ஞாயிறு, 26 மே 2019

chevronLeft iconமுந்தையது