மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

தோல்விக்கு சபரிமலை விவகாரம் காரணமல்ல: பினராயி

தோல்விக்கு சபரிமலை விவகாரம் காரணமல்ல: பினராயி

மக்களவைத் தேர்தலில் இடதுசாரிகள் தோல்வியடைந்திருப்பதற்கு சபரிமலை விவகாரம் காரணமல்ல என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் 15 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், 2 தொகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும், கேரளா காங்கிரஸ் (எம்), புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு தொகுதியில் மட்டும் வென்றுள்ளது. இது கேரளாவில் இடதுசாரிகளுக்கு மிகப் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு நேற்று (மே 25) முதன்முறையாக கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம் மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். கேரளாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றது குறித்து அவர் கூறுகையில், “நடந்தது மக்களவைத் தேர்தல். சட்டமன்றத்துக்கான தேர்தல் அல்ல. காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வரும் என்று எண்ணி மக்கள் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச் செய்துள்ளார்கள். காங்கிரஸ் கட்சித் தலைவர் கேரளாவின் வயநாட்டில் போட்டியிட்டதும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு ஒரு காரணமாகும்” என்றார்.

சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் போகலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவைக் கேரள அரசு அமல்படுத்தியதற்கு இந்து அமைப்புகளிடமும், பாரதிய ஜனதா கட்சியிடமும் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. போராட்டங்களும், கலவரங்களும் வெடித்தன. கம்யூனிஸ்ட் கட்சியின் தோல்விக்கு இதுதான் காரணமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “சபரிமலை விவகாரம் தேர்தலில் எந்த வகையிலும் பாதிக்கவில்லை. உண்மையில் அப்படிப் பாதித்திருந்தால் பாஜகவுக்குத்தான் பெரும் பயன் கிடைத்திருக்க வேண்டும். பாஜக பத்தனம்திட்டா தொகுதியில் வென்றிருக்க வேண்டும். ஆனால், மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது” என்றார்.

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல்.ஏ.க்களை இழுக்க எடப்பாடி தீவிரம்!

.

ஓ.பன்னீரின் 'பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி

.

மத்திய அமைச்சராகிறார் ஹெச்.ராஜா?

.

.

மகனுக்கு கப்பல் துறை கேட்கும் பன்னீர்?

.

தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!

.

.

.

ஞாயிறு, 26 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon