மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

தபோல்கர் கொலை: வலதுசாரி வழக்கறிஞர் கைது!

தபோல்கர் கொலை: வலதுசாரி வழக்கறிஞர் கைது!

பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில், வலதுசாரி அமைப்பின் வழக்கறிஞர் சஞ்ஜீவ் புனலேகரை சிபிஐ கைது செய்துள்ளது.

புனே நகரில் கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி காலை நடைப்பயிற்சி சென்றிருந்த பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கரை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து புனே சிட்டி போலீசார் முதலில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். பின்னர் 2014 மே மாதத்தில் வழக்கு சிபிஐ கைக்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கில், சனாதன் சன்ஸ்தா வலதுசாரி அமைப்பின் ஒரு பிரிவான இந்து ஜனாஜகிருட்டி சமிதியைச் சேர்ந்த இ.என்.டி ஸ்பெஷலிஸ்ட் விரேந்திர டவாதே என்பவரை 2016 ஜூன் 10இல் சிபிஐ கைது செய்தது. 2016இல் முதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. அதில், இந்து ஜனாஜகிருட்டி சமிதி மற்றும் தபோல்கரால் நிறுவப்பட்ட மகாராஷ்டிரா ஆந்தாஸ்ரத்தா நிர்மூலன் சமிதி இடையேயான சித்தாந்த வேறுபாட்டால் தபோல்கர் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு தபோல்கரைச் சுட்டுக் கொன்றதாக சச்சின் ஆண்டூர் என்பவரை, புனே நகரில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த நிலையில் நேற்று (மே 25) மதியம் 3.45 மணியளவில் வழக்கில் தொடர்புடையதாக சனாதன் சன்ஸ்தா அமைப்பின் வழக்கறிஞர் சஞ்ஜீவ் புனலேகர் மற்றும் விக்ரம் வைபவ் என்பவரை சிபிஐயினர் கைது செய்துள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போபால் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற பிரக்யா தாகூருக்கு, மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்ஜீவ் புனலேகர் ஆஜராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்ட பாணியில் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று கூறப்பட்டது. இருவரும் இந்துத்துவா அரசியலைக் கடுமையாக விமர்சித்து வந்தவர்கள் ஆவர். இந்த நிலையில் 2018ஆம் ஆண்டு, தபோல்கரும் கவுரி லங்கேஷும் ஒரே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக சிபிஐ புனே சிறப்பு நீதிமன்றத்தில் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல்.ஏ.க்களை இழுக்க எடப்பாடி தீவிரம்!

.

ஓ.பன்னீரின் 'பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி

.

மத்திய அமைச்சராகிறார் ஹெச்.ராஜா?

.

.

மகனுக்கு கப்பல் துறை கேட்கும் பன்னீர்?

.

தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!

.

.

.

ஞாயிறு, 26 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon