மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

கென்னடி கிளப்: கைகொடுக்குமா கபடி ஃபார்முலா!

கென்னடி கிளப்: கைகொடுக்குமா கபடி ஃபார்முலா!

சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கும் கென்னடி கிளப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. எதிர்பார்ப்பிலிருக்கும் இந்தப் படத்தின் டீசரை நேற்று (மே 25) தனுஷ் வெளியிட்டுள்ளார்.

சசிகுமார், பாரதிராஜா, சமுத்திரக்கனி, சூரி, காயத்ரி ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தில் கபடி வீராங்கனைகளாக நீது, சௌம்யா, மீனாட்சி, சௌந்தர்யா, ஸ்மிருதி என புதுமுக நடிகைகளும் நடித்துள்ளனர். நேற்று முன்தினத்திலிருந்தே தனுஷ் வெளியிடும் இந்தப் படத்தின் டீசர் பற்றிய எதிர்பார்ப்பு சமூக வலைதளங்களில் அதிகமாயிருந்து. அதன்படி, நேற்று மாலை 5 மணிக்கு தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் டீசரை வெளியிட்டு படக்குழுவுக்குத் தனது வாழ்த்துகளையும் கூறி பதிவிட்டுள்ளார்.

பெண்களின் கபடி அணி பயிற்சியாளராக சசிகுமார் நடித்துள்ளார். இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டான கபடியின் பெருமையைச் சொல்வதாக அமைந்துள்ளது இதன் டீசர். ‘கடைசி தீக்குச்சியை கொளுத்தறப்போ இருக்கற கவனம், முத தீக்குச்சியைக் கொளுத்தறப்பவே இருக்கணும். அப்போதான் நாம ஜெயிக்க முடியும்’ என டீசர் முடியும்போது வரும் சசிகுமாரின் வசனம் ரசிகர்களை ஈர்த்துள்ளது.

ஆண்கள் கபடியை மையமாக வைத்து இயக்கிய தனது முதல் படமான வெண்ணிலா கபடி குழு படத்தின் வெற்றிக்குப் பின் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் சுசீந்திரன். சமீபத்தில் வெளியான அவரது நெஞ்சில் துணிவிருந்தால், ஜீனியஸ் என்ற இரு படங்களும் சரியாகப் போகாத நிலையில் கென்னடி கிளப் கைகொடுக்குமா எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு, ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். நல்லுசாமி பிக்சர்ஸின் தாய் சரவணன் தயாரித்துள்ளார்.

கென்னடி கிளப் டீசர்

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல்.ஏ.க்களை இழுக்க எடப்பாடி தீவிரம்!

.

ஓ.பன்னீரின் 'பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி

.

மத்திய அமைச்சராகிறார் ஹெச்.ராஜா?

.

.

மகனுக்கு கப்பல் துறை கேட்கும் பன்னீர்?

.

தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!

.

.

.

ஞாயிறு, 26 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon