மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

லாட்டரி விற்றவருக்கு 5 கோடி பரிசு!

லாட்டரி விற்றவருக்கு 5 கோடி பரிசு!

திருநெல்வேலியைச் சேர்ந்த லாட்டரி சீட்டு விற்பனையாளர் ஒருவர் கேரள விஷு பம்பர் லாட்டரி சீட்டின் முதல் பரிசான 5 கோடி ரூபாயைப் பெற்றுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் கோட்டைக் கருங்குளம் எனும் ஊரைச் சேர்ந்தவர் செல்லையா. சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்னர், இவர் வேலை தேடி கேரள மாநிலம் வாழக்குளம் பகுதிக்குச் சென்றார். அங்குள்ள உணவகத்தில் பணியில் சேர்ந்தார். கடந்த ஓராண்டாக இவர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். தற்போது மனைவி சுமதி, மகன் சஞ்சீவ், மகள் செல்வநமீதாவுடன், அப்பகுதியிலுள்ள வாடகை வீடொன்றில் வசித்து வருகிறார் செல்லையா.

சமீபத்தில் இவர் கேரள காருண்யா விஷு பம்பர் லாட்டரி சீட்டை விற்பனை செய்தார். மூவாற்றுபுழாவிலுள்ள பிரதீக்‌ஷா லாட்டரி ஏஜென்ஸி உரிமையாளர் நௌஷாத்திடம் இருந்து இவர் இந்த லாட்டரி சீட்டுகளை வாங்கினார். ஆனால், இவற்றில் சில சீட்டுகள் விற்பனையாகவில்லை. இந்த நிலையில், கடந்த 23ஆம் தேதியன்று கேரள காருண்யா விஷு பம்பர் லாட்டரி சீட்டு முடிவுகள் வெளியாகின. முதல் பரிசாக 5 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது. அந்த சீட்டு நௌஷாத்திடம் இருந்து பெறப்பட்ட தகவல் கேரள ஊடகங்களில் வெளியானது. ஆனால், அதனை வாங்கியவர் யார் என்று தெரியவில்லை.

இந்நிலையில், நேற்று (மே 24) வாழக்குளம் பேங்க் ஆஃப் இந்தியா மேலாளர் ஷாஜியிடம் இருந்து 5 கோடி ரூபாய் லாட்டரி சீட்டு பரிசுக்கான காசோலையைப் பெற்றுக்கொண்டார் செல்லையா. அப்போதுதான், லாட்டரி சீட்டு விற்றவரே பரிசு வாங்கிய விவரம் வெளியில் தெரிய வந்தது. இந்த நிகழ்வில் அவரது குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.

இந்த பணத்தின் மூலமாக நிலம் வாங்கி சொந்தமாக வீடு கட்ட வேண்டுமென்றும், குழந்தைகளுக்கு நல்ல கல்வியைத் தர வேண்டுமென்றும் விருப்பம் தெரிவித்துள்ளனர் செல்லையா – சுமதி தம்பதிகள்.

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: அரசியலில் ரஜினி, கமலை இணைக்க இளையராஜா முயற்சி!

.

ஓ.பன்னீரின் 'பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி

.

மத்திய அமைச்சராகிறார் ஹெச்.ராஜா?

.

.

மகனுக்கு கப்பல் துறை கேட்கும் பன்னீர்?

.

தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!

.

.

.

சனி, 25 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon