மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

நாமக்கல்: விபத்தில் வழக்கறிஞர் பலி!

நாமக்கல்: விபத்தில் வழக்கறிஞர் பலி!

நாமக்கல் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் உயிரிழந்துள்ளார்.

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியை சேர்ந்தவர் சையத் இப்ராகிம் (50). இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று (மே 24) இரவு கிருஷ்ணகிரியிலிருந்து கரூர் நோக்கி காரில் சென்றுள்ளார். காரை முகமது என்பவர் இயக்கியுள்ளார்.

நாமக்கல்-கரூா் தேசிய நெடுஞ்சாலையில், நல்லி பாளையம் புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது கார் விபத்துக்குள்ளாகியிருக்கிறது. ஓட்டுநரின் கட்டுப்பாடை இழந்த கார் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வழக்கறிஞர் சையத் இப்ராகிம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஓட்டுநர் படுகாயம் அடைந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வழக்கறிஞரின் உடலை மீட்டு நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து ஏற்பட்ட போது குறிப்பிட்ட அந்த லாரி நிற்காமல் போனதாகவும், அந்த லாரியை கண்டுபிடிக்க கீரம்பூர் சுங்கச்சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக நல்லி பாளையம் காவல் ஆய்வாளர் ரத்னகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். உயிரிழந்த வழக்கறிஞர் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜியின் நண்பர் என்று கூறப்படுகிறது. இவர் பள்ளப்பட்டியின் திமுக முன்னாள் சேர்மன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: அரசியலில் ரஜினி, கமலை இணைக்க இளையராஜா முயற்சி!

.

ஓ.பன்னீரின் 'பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி

.

மத்திய அமைச்சராகிறார் ஹெச்.ராஜா?

.

.

மகனுக்கு கப்பல் துறை கேட்கும் பன்னீர்?

.

தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!

.

.

.

சனி, 25 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon