மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 23 பிப் 2020

கசட தபற: மியூஸிக் காக்டெயில்!

கசட தபற: மியூஸிக் காக்டெயில்!

சிம்பு தேவன் இயக்கியுள்ள கசட தபற படத்தில் பணியாற்றிய 6 இசையமைப்பளர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.

புலி படத்திற்கு பின் சிம்பு தேவன் வடிவேலுவை வைத்து இம்சை அரசன் இரண்டாம் பாகத்தை எடுத்து கொண்டிருந்தார். இப்படத்தை இயக்குநர் ஷங்கர் தயாரித்துக் கொண்டிருந்தார். இடையில் தயாரிப்பு தரப்பிற்கும் வடிவேலுவுக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் படம் பாதியில் நிறுத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் சத்தமில்லாமல் சிம்பு தேவன் கசட தபற என்ற புதிய படத்தை உருவாக்கியுள்ளார். தென்சென்னையை மையமாகக்கொண்டு உருவான இந்தப் படத்தை வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனியுடன் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படத்தின் டைட்டிலில் ஆறு எழுத்துக்கள் இடம் பெற்றிருப்பது போல படத்திலும் ஆறு கதைகள் உள்ளதாகவும், ஒவ்வொரு கதைக்கும் வெவ்வேறு ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ளதாகவும் படக்குழு தெரிவித்தது.

கடந்த தினங்களில் கசட தபற படத்தின் ஒளிப்பதிவாளர்கள் யாரெனவும், படத்தொகுப்பாளர்கள் யாரெனவும் அவர்களின் பெயர்கள் வெளியானது படக்குழு. தற்போது அந்தப் படத்தின் இசையமைப்பாளர்கள் யாரென வெங்கட் பிரபுவின் தந்தையும் இயக்குநருமான கங்கை அமரன் தனது டிவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். அவர்களின் விவரம்: சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா, ஜிப்ரான், சாம் சி.எஸ், பிரேம்ஜி அமரன், ஷான் ரோல்டன்.

மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் நாளை வெளியிடுவார் என படக்குழு அறிவித்துள்ளது.

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: அரசியலில் ரஜினி, கமலை இணைக்க இளையராஜா முயற்சி!

.

ஓ.பன்னீரின் 'பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி

.

மத்திய அமைச்சராகிறார் ஹெச்.ராஜா?

.

.

மகனுக்கு கப்பல் துறை கேட்கும் பன்னீர்?

.

தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!

.

.

.

சனி, 25 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon