மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 ஜன 2021

தர்மபிரபு: ரிலீஸ் அப்டேட்!

தர்மபிரபு: ரிலீஸ் அப்டேட்!வெற்றிநடை போடும் தமிழகம்

யோகிபாபு கதா நாயகனாக நடிக்கும் ஃபேண்டஸி கலந்த அரசியல் காமெடிப் படமான தர்மபிரபுவின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வளர்ந்து வரும் யோகி பாபு, நகைச்சுவை கதாபாத்திரங்களோடு தனக்கேற்ற ரோல்களில் கதாநாயகனாகவும் கவனம் செலுத்தி வருகிறார். 18 படங்கள் கையிருப்பில் வைத்திருக்கும் யோகி பாபு, அதில் நான்கு படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

சென்ற மாதம் இவர் நடித்த கூர்கா படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சாம் ஆண்டன் இயக்கிய கூர்கா படத்தின் டீஸரை நடிகர் தனுஷ் வெளியிட்டார்.

இந்நிலையில் தர்மபிரபு படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. ஜூன் 28ஆம் தேதி வெளியாகும் இப்படத்தில் யோகிபாபு எமலோகத்தில் எமதர்மனாக நடிக்கிறார். முத்துக்குமரன் இயக்கியிருக்கும் இப்படத்தில் மேக்னா நாயுடு, ஜனனி ஐயர், ரமேஷ் திலக், கருணாகரன், ராதா ரவி, மொட்டை ராஜேந்தர் ஆகியோர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

.

.

மேலும் படிக்க

.

.

ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!

.

.

பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார்: தங்க தமிழ்ச்செல்வன்

.

திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!

.

அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!

.

பலித்தது மின்னம்பலம் - மக்கள் மனம் - ஒரு சோறு பதம்!

.

.

சனி, 25 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon