மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 23 பிப் 2020

அதிமுகவில் இணைந்த அமமுக மண்டலப் பொறுப்பாளர்!

அதிமுகவில் இணைந்த அமமுக மண்டலப் பொறுப்பாளர்!

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளுக்கும் வலுவான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அமமுக அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. மக்களவைத் தேர்தலில் மொத்தமாக 22.25 லட்சம் வாக்குகள் பெற்ற அக்கட்சிக்கு 5.25 சதவிகிதம் வாக்குகள் கிடைத்துள்ளது. இந்தத் தேர்தல் மூலம் எடப்பாடி அரசு கவிழ்ந்துவிடும் என்றும், அமமுக தமிழக அரசியலில் பலம்வாய்ந்த சக்தியாக உருவெடுக்கும் என்று நினைத்த தினகரனும், அமமுகவினரும் சற்றும் எதிர்பாராத இந்தத் தோல்வியால் அதிர்ச்சியில் உள்ளனர்.

தேர்தல் முடிவுகள் தொடர்பாக 23ஆம் தேதி மாலை அறிக்கை வெளியிட்டிருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு உழைக்க வேண்டிய நேரமிது. தவறான வழிகாட்டுதலாலும், சுயநலம் கொண்டு தனி மனிதர்கள் சிலர் உருவாக்கிய தோற்றப் பிழைகளாலும் திசை மாறிய கழக உடன்பிறப்புகள் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும்” என்று அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் அமமுகவின் தென்மண்டல பொறுப்பாளராக இருந்த ஆர்.பி.ஆதித்தன் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். சென்னையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (மே 25) பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரையும் சந்தித்த ஆதித்தன், பூங்கொத்து கொடுத்து தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். அப்போது துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதுதொடர்பாக பன்னீர்செல்வம் தனது ட்விட்டரில், “அமமுக கழக அமைப்புச் செயலாளரும் தென் மண்டல பொறுப்பாளருமான திருநெல்வேலி மாவட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.ஆதித்தன் அவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி தாய்க்கழகமான அதிமுகவில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்” என்று குறிப்பிட்டுள்ளார். தேர்தல் தோல்வியினால் அமமுகவில் பலர் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்களை அதிமுகவுக்கு மீண்டும் கொண்டுவர ரகசிய பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: அரசியலில் ரஜினி, கமலை இணைக்க இளையராஜா முயற்சி!

.

ஓ.பன்னீரின் 'பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி

.

மத்திய அமைச்சராகிறார் ஹெச்.ராஜா?

.

.

மகனுக்கு கப்பல் துறை கேட்கும் பன்னீர்?

.

தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!

.

.

.

சனி, 25 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon