மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 23 பிப் 2020

வறண்ட அணைகள்: நெல்லை மக்கள் கவலை!

வறண்ட அணைகள்: நெல்லை மக்கள் கவலை!

மழையில்லாத காரணத்தினால் திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பாலான அணைகள் வறண்டு போயுள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் மணிமுத்தாறு, பாபநாசம், கருப்பாநதி, குண்டாறு, அடவி நயினார், சேர்வலாறு, கடனாநதி, ராமநதி, வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு உள்ளிட்ட 11 அணைகள் இருக்கின்றன. இவற்றில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டியுள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் மட்டுமே தற்போது குறைந்த அளவில் நீர் இருப்பில் உள்ளது. மற்ற அணைகளில் நீரின் அளவு குறைந்தும், சுத்தமாக வறண்டும் காணப்படுகின்றன.

பாபநாசம் அணைப்பகுதியில் சகதி கலந்த நீரே உள்ளது. 143 அடி நீர்மட்டமுள்ள இந்த அணையில் தற்போது 9 அடி அளவில் நீர் இருப்பு உள்ளது. மணிமுத்தாறு அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக நீர் திறந்துவிடப்படுகிறது. சேர்வலாறு அணையிலும் நீர் இருப்பு குறைவாக உள்ளது. இந்த 3 அணைகளிலும் கோடை காலத்திலும் நீர் இருக்கும் என்ற நிலைமை, இந்த ஆண்டு மாறியுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வழக்கமாக, மே மாத இறுதியில் தென்மேற்குப் பருவமழை கேரளத்தை நிறைக்கும். அப்போது, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் மழைப்பொழிவு இருக்கும். இதன் காரணமாக இந்த அணைகளில் நீர் வரத்து ஏற்படும். இதுவரை தென்மேற்குப் பருவமழை தொடங்காததால், இந்த அணைகளில் வறட்சி தொடர்கிறது.

நெல்லை மாவட்டத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் உடனடியாக மழை பெய்ய வேண்டும். அப்போதுதான், முக்கியமான 3 அணைகள் உட்பட 11 அணைகளிலும் நீர் வரத்து இருக்கும்.

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: அரசியலில் ரஜினி, கமலை இணைக்க இளையராஜா முயற்சி!

.

ஓ.பன்னீரின் 'பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி

.

மத்திய அமைச்சராகிறார் ஹெச்.ராஜா?

.

.

மகனுக்கு கப்பல் துறை கேட்கும் பன்னீர்?

.

தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!

.

.

.

சனி, 25 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon