மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 23 பிப் 2020

குறையும் வாராக் கடன் பிரச்சினை!

குறையும் வாராக் கடன் பிரச்சினை!

இந்தியாவின் பொதுத் துறை வங்கிகள் 2018-19 நிதியாண்டில் மொத்தம் ரூ.1.2 லட்சம் கோடி வாராக் கடனை வசூல் செய்துள்ளன.

இந்திய வங்கிகள் நீண்ட காலமாகவே வாராக் கடன் பிரச்சினைகளால் தவித்து வருகின்றன. வங்கிகளை மீட்க மூலதன உதவிகள் அரசு தரப்பிலிருந்து வழங்கப்பட்டு வருவதோடு, வாராக் கடன் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வங்கி திவால் சட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகளால் 2018-19 நிதியாண்டில் ரூ.1.2 லட்சம் வாராக் கடன் வசூல் செய்யப்பட்டுள்ளது. எனினும் தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயத்தின் கீழ் ரூ.1.8 லட்சம் லட்சம் கோடி வசூல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தின் கீழ் வங்கிகள் ரூ.55,000 கோடியை மட்டுமே வசூல் செய்துள்ளன. ஒட்டுமொத்தமாக ரூ.1.2 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. 2017-18 நிதியாண்டில் ரூ.74,562 கோடி வாராக் கடன் வசூல் செய்யப்பட்டிருந்தது. எஸ்ஸார் ஸ்டீல், பூஷன் பவர் & ஸ்டீல்ஸ் நிறுவனங்கள் அதிக வாராக் கடன்களைக் கொண்டுள்ளன. இன்னும் இரண்டு மாதங்களுக்குள் இவ்விரு நிறுவனங்களிடமிருந்து ரூ.50,000 கோடி வரையில் வசூலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: அரசியலில் ரஜினி, கமலை இணைக்க இளையராஜா முயற்சி!

.

ஓ.பன்னீரின் 'பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி

.

மத்திய அமைச்சராகிறார் ஹெச்.ராஜா?

.

.

மகனுக்கு கப்பல் துறை கேட்கும் பன்னீர்?

.

தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!

.

.

.

சனி, 25 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon