மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 25 மே 2019

இஸ்லாமியர்களை தாக்கிய பசுப் பாதுகாவலர்கள்!

இஸ்லாமியர்களை தாக்கிய பசுப் பாதுகாவலர்கள்!

மக்களவைத் தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மையோடு வென்று, இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். அதற்குள்ளாக, மத்தியப் பிரதேச மாநிலம் சியோனியில் மூன்று இஸ்லாமியர்கள் மாட்டிறைச்சி எடுத்துச்செல்வதாக செய்திகள் பரவியதைத் தொடர்ந்து ஒரு பெண் உட்பட மூன்று இஸ்லாமியர்களை பசுப் பாதுகாவலர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், தங்களை ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷங்களை எழுப்பும்படி பசுப் பாதுகாவலர்கள் வற்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட மூன்று இஸ்லாமியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மூன்று இஸ்லாமியர்கள் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.

அந்த வீடியோவில் பசுப் பாதுகாவலர்கள் கைகளில் கம்புகளுடன் நிற்கின்றனர். மூன்று இஸ்லாமியர்களை ஒருவர்பின் ஒருவராக மரத்தில் கட்டி கடுமையாக தாக்குகின்றனர். சுற்றி நிற்கும் மக்கள் வேடிக்கை பார்ப்பதுபோல வீடியோ வெளியாகியுள்ளது. ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லும்படி பசுப் பாதுகாவலர்கள் இஸ்லாமியர்களை தாக்கியுள்ளனர். மேலும் அவர்களுடன் வந்த பெண்ணை செருப்புகளால் கடுமையாக தாக்கியுள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர். மற்ற பசுப் பாதுகாவலர்களையும் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதின் ஓவைசி தனது ட்விட்டர் பக்கத்தில், “மோடி வாக்காளர்களால் உருவாக்கப்பட்ட பசுப் பாதுகாவலர்கள் இஸ்லாமியர்களை இப்படித்தான் நடத்துகின்றனர். மோடி சொன்ன ஒருங்கிணைந்த, மதச்சார்பற்ற புதிய இந்தியாவுக்கு வரவேற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: அரசியலில் ரஜினி, கமலை இணைக்க இளையராஜா முயற்சி!

.

ஓ.பன்னீரின் 'பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி

.

தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!

.

ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!

.

.

திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!

.

.

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்! ...

6 நிமிட வாசிப்பு

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

'மன்னிப்பு கேட்க வேண்டும்': தலைமை நீதிபதிக்கு எதிராக வலுக்கும் ...

6 நிமிட வாசிப்பு

'மன்னிப்பு கேட்க வேண்டும்': தலைமை நீதிபதிக்கு எதிராக வலுக்கும் குரல்கள்!

சனி 25 மே 2019