மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 21 செப் 2020

தோல்வி: மவுன ராமதாஸ்

தோல்வி: மவுன  ராமதாஸ்

மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 7 இடங்களிலும் தோல்வியைத் தழுவிய நிலையில் இதுதொடர்பான கேள்விக்கு பாமக நிறுவனர் பதில் அளிக்கவில்லை

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் மற்றும் மாநிலங்களவையில் ஒரு இடம் என ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி தருமபுரி, விழுப்புரம் , அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், கடலூர், மத்திய சென்னை மற்றும் திண்டுக்கல் ஆகிய 7 தொகுதிகளில் பாமக போட்டியிட்டது. தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி உட்பட அக்கட்சியைச் சேர்ந்த 7 பேரும் தேர்தலில் தோல்வியடைந்தனர்.

இந்நிலையில், வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குருவின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ராமதாஸ் இன்று (மே 25) திண்டிவனத்தை அடுத்த கோனேரிகுப்பத்தில் ஜெ.குருவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மிகப்பெரும்பான்மையான அளவில் இந்திய மக்கள் பிரதமர் மோடியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். வரலாறு காணாத மிகப் பெரிய வெற்றியை அவருக்குக் கொடுத்திருக்கிறார்கள். இரண்டாவது முறையாகப் பிரதமராகும் மோடிக்கு எங்கள் சார்பாகவும், பாமக சார்பாகவும் வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தலில் 7 இடங்களில் பாமக தோல்வி அடைந்தது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ராமதாஸ் மற்றும் அங்கிருந்த பாமக நிர்வாகிகள் பதிலளிக்காமல் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இந்த சந்திப்பின்போது அன்புமணி ராமதாஸ் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: அரசியலில் ரஜினி, கமலை இணைக்க இளையராஜா முயற்சி!

.

ஓ.பன்னீரின் 'பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி

.

தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!

.

ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!

.

.

திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!

.

.

சனி, 25 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon