மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 23 பிப் 2020

போதைப்பொருட்கள் பறிமுதல்: சென்னையில் கைது நடவடிக்கை!

போதைப்பொருட்கள் பறிமுதல்: சென்னையில் கைது நடவடிக்கை!

வளசரவாக்கத்தில் போதைப்பொருள் வைத்திருந்த 5 பேரைக் கைது செய்தனர் சென்னை போலீசார்.

சென்னை வளசரவாக்கம் பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனை தொடர்ந்து நடைபெறுவதாகக் காவல் துறைக்குப் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், நேற்று (மே 24) வளசரவாக்கம் மாந்தோப்பு பகுதியில் சிலர் சாலையில் நின்று வாக்குவாதம் செய்தனர். இதனைப் பார்த்த சிலர், அவர்கள் போதைப்பொருட்களை சப்ளை செய்வது குறித்துப் பேசியதைத் தெரிந்துகொண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்களிடம் இருந்த போதைப்பொருள் கைப்பற்றப்ட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அமர்நாத், சரவணன், முருகேசன் குமார், தமிழ்வாணன், சசிதரன் ஆகிய 5 பேர் கைதாகினர். அவர்களிடம் இருந்து உப்பு போன்ற ஒரு பொருள் கைப்பற்றப்பட்டது. குளிர்பானங்களுடன் கலந்து இதனைப் போதைப்பொருளாகப் பயன்படுத்தப்படுவது விசாரணையில் தெரிய வந்தது. இதன் மதிப்பு 1 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது.

கைதானவர்களிடம் நடந்த விசாரணைக்குப் பிறகு, அவர்கள் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 10 கிலோ போதைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர் போலீசார். ராமநாதபுரத்தில் இருந்து நண்பர்கள் அந்த போதைப்பொருட்களை அனுப்பி வைத்ததாகவும், அதனை விற்க முயன்றபோது பிடிபட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி விசாரணை தொடர்ந்து வருகிறது. கைதான 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: அரசியலில் ரஜினி, கமலை இணைக்க இளையராஜா முயற்சி!

.

ஓ.பன்னீரின் 'பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி

.

தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!

.

ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!

.

.

திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!

.

.

சனி, 25 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon